மேலும் அறிய

’ஒரு பாய்பிரெண்டுக்குப் போரா? அக்கப்போரால்ல இருக்கு’ - பீகாரில் ஒரு பாய்பிரெண்ட் பஞ்சாயத்து!

மாலின் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்.அவர்கள் அடித்துக்கொண்டதற்கு ஒரு ஆண் தான் காரணம் எனக் கூறப்படுகிறது

பாய்பிரெண்ட் பஞ்சாயத்தால் இரண்டு பெண்கள் பொது இடத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பீகாரின் முசாஃபர்பூர் நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முசாஃபர்பூரின் மிகப் பிரபல மாலான மோதிஜீலியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மாலின் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்.அவர்கள் அடித்துக்கொண்டதற்கு ஒரு ஆண் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இரண்டு பெண்கள் அடித்துக்கொள்ளும்போது வேறு ஒரு பெண் வந்து இடைமறிக்கிறார். ஆனால் அவரும் கடைசியில் கோதாவில் இறங்குகிறார். இவர்கள் மூன்றுபேரையும் தடுத்து நிறுத்தப் போராடுகிறார் ஒரு இளைஞர். அவர் அந்த பெண்களுக்கு இடையே நின்றுகொண்டு சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். 'இதைக் கேட்க நீ யாரு?’ என்னும் கதையாக அவரையும் ஓரமாகத் தள்ளுகின்றனர் அந்தப் பெண்கள்.

இந்த அடிதடித் தகராறு நீண்ட நேரம் நடக்கிறது. இதனால் மாலிலும் சலசலப்பு ஏற்படுகிறது. வேறு ஒருநபர் நிலைமையை பெண்களுக்கு எடுத்துச் சொல்ல முயற்சி செய்கிறார். அந்த பெண்களைக் கஷ்டப்பட்டு பிரிக்கிறார்கள். சுற்றி விசாரித்ததில் தங்களுடைய பாய்பிரண்ட்ஸ் குறித்த பஞ்சாயத்தில்தான் அந்தப் பெண்கள் இருவரும் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் அடித்துக்கொண்டவர்களில் எந்த ஒரு தரப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக போலீசில் புகார் தெரிவிக்கவில்லை.'சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு?’ என்னும் கதையாக அப்படியே கலைந்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கே பார்த்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக காவல்நிலையத்திலேயே காவலர்கள் இருவர் அடித்துக்கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது. ஒரே பெண்ணைக் காதலித்து வந்த அந்தக் காதலர்கள் இருவரும் யார் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்வது என்கிற போட்டியில் காவல்நிலையத்திலேயே அடித்துக்கொண்டனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்தக் காவலர்கள் இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல்னா சும்மாவா பாஸ்!  

இன்றைய வேறு சில செய்திகள்:

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய செய்திகளை கீழே காணலாம்.
  • நீட் தேர்வுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்குழு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு
  • நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசே தனி சட்டத்தை இயற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று விலக்கு பெற பரிந்துரை
  • நீட் தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான பாரபட்சமான தேர்வு முறை – நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை
  • ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 54 ஆயிரத்து 45 வேட்புமனுக்கள் தாக்கல்
  • 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு நேற்று ஒரே நாளில் 34 ஆயிரம் பேர் வரை வேட்புமனுத் தாக்கல்
  • ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு
  • உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி வரும் 24-ந் தேதி நேரில் சந்திப்பு
  • தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோரில் 1,623 நேற்று ஒரே நாளில் குணம் அடைந்தனர்
  • தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 23 பேர் நேற்று உயிரிழப்பு
  • 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களின் கல்வி, விடுதி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டம் நடத்த அனுமதி – தமிழக அரசு
  • தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நியமனத்தில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஒருநாள் கூட கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது – உச்சநீதிமன்றம் உத்தரவு
  • தமிழ்நாட்டில் மேலும் 1,661 பேருக்கு புதியதாக கொரோனா
  • சென்னையில் நேற்று புதியதாக 206 பேருக்கு கொரோனா
  • புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதியில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி தரிசனம்
  • புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவி யாருக்கு? ஆளுங்கட்சியான என். ஆர். காங்கிரஸ் தீவிர ஆலோசனை
  • இந்தியா – நேபாள ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி – உத்தரகாண்டில் தொடங்கியது
  • அக்டோபர் மாதம் முதல் உபரியாக உள்ள தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு
  • கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – 5 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி
  • ஐ.பி.எல். போட்டித்தொடரில் பெங்களூர் அணியை கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget