மேலும் அறிய

Kazan Khan: காமெடி கலந்த டெரர் வில்லன்.. தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்த நடிகர் கசான் கானின் கேரக்டர்கள்..!

வில்லன் கசான் கான் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், சினிமாவில் அவர் நடித்த சில பிரபலமான கதாபாத்திரங்கள் பற்றி காணலாம்.

தென்னிந்திய திரையுலகில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக மிரட்டலான வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் கசான் கான். செந்தமிழ் பாட்டு திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் ஜூன் 12ம் தேதியான நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மரண செய்தி தெரிந்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சோசியல் மீடியா மூலம் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.  

Kazan Khan: காமெடி கலந்த டெரர் வில்லன்..  தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்த நடிகர் கசான் கானின் கேரக்டர்கள்..!

கமல், விஜய்,அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த கசான் கான் நடித்த ஒரு சில கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவை. அவற்றில் ஒரு சிலவற்றை பற்றி பார்க்கலாம் :

சேதுபதி ஐபிஎஸ் :

இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத பயங்கரவாத கும்பலின் தலைவனாக சிவப்பிரகாசம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியாவில் அவர்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக விஜயகாந்த் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் குடும்பத்தாரிடம் நல்லவர் வேஷம் போட்டு இருப்பார். மீனாவுடன் இணைந்து 'சாத்து நட சாத்து...' என்ற பாடலில் நடனமாடி கொடூர வில்லனாக மிரட்டியிருப்பார்.

Kazan Khan: காமெடி கலந்த டெரர் வில்லன்..  தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்த நடிகர் கசான் கானின் கேரக்டர்கள்..!

முறை மாமன் :

முறைமாமன் படத்தில் குஷ்பூவை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படும் உறவுக்காரனாக ரத்னம் என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் குஷ்பூவின் தாலியை அறுக்கும் போது ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். முரட்டுத்தனமான வில்லனாக வெள்ளை வேஷ்டி சட்டையில்  நடித்திருந்தார்.

மேட்டுக்குடி :

இப்படத்திலும் கார்த்திக்குடன் இணைந்து நடித்து இருந்தார் கசான் கான். இதில் நடிகர் திலகனின் மகனாக நடித்திருந்தார். 

உள்ளத்தை அள்ளித்தா :

கார்த்திக்கின் உறவுக்காரராக ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கசான் கான். கார்த்திகை உசுப்பேற்றி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு மொத்த சொத்தையும் அபகரிக்க பிளான் போடுவதில் இருந்து கிளைமாக்ஸ் காட்சியில் அனைவைரையும் கடத்தி வைத்து முதல் பல வேடிக்கையான காட்சிகள் இடம்பெற்று இருந்தன. காமெடி கலந்த வில்லத்தனத்தையும் ரசிகர்கள் ரசித்தனர்.

Kazan Khan: காமெடி கலந்த டெரர் வில்லன்..  தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்த நடிகர் கசான் கானின் கேரக்டர்கள்..!

பிரியமானவளே :

நடிகர் விஜய் நடித்த பத்ரி மற்றும் பிரியமானவளே படத்தில் நடித்திருந்தார் கசான் கான். குறிப்பாக பிரியமானவளே படத்தில் சிம்ரனின் முறைமாமனாக அவர் செய்த காமெடி மிகவும் பிரபலம்.  7 டைம்ஸ் 7 டைம்ஸ் என அவர் தனது ஆர்ம்ஸை உயர்த்தி காட்டி செய்யும் காமெடியை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.    

வல்லரசு : 

நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்த இப்படத்தில் தீவிரவாதியாக கசான் கான் நடித்திருந்தார். ஏராளமான படங்களில் வில்லனாக, தீவிரவாதியாக நடித்த கசான் கான் இதுவரையில் 54க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அவர் 2015ம் ஆண்டு வெளியான 'லைலா ஓ லைலா' படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி பிசினஸில் ஆர்வம் காட்ட துவங்கிவிட்டார். அவரின் இழப்பு திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget