மேலும் அறிய

Dhruva natchathiram Update: களத்தில் குதித்த லியோ பட தயாரிப்பாளர்! ஜுலை 14ல் விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ்?

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

வருகிறது துருவ நட்சத்திரம்?

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்திற்கான பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த பிறகும் கூட, பல்வேறு பிரச்னைகள் காரணமாக இதுவரை வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், துருவநட்சத்திரம் படத்தை மாஸ்டர், மகான் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களை தயாரித்த லலித் பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்று, படத்தை தானே  வெளியிடுகிறேன் என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிரெய்லர், ரிலீஸ் அப்டேட்:

அதோடு, படத்தின் டிரெய்லர் கூட தயாராக உள்ளதாகவும், ஜுலை 14ம் தேதி படத்தை வெளியிடவும், அதை முன்னிட்டு வரும் 17ம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் தந்த அப்டேட்:

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ”கௌதம் மேனனின் துருவநட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசை தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டேன். டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறோம் என குறிப்பிட்டு இருந்தார். அதைதொடர்ந்து தற்போது துருவ நட்சத்திரம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன்:

காதல் சொட்டும் விண்ணைதாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களையும் தாண்டி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற ஆக்‌ஷன் படங்களையும் இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான முத்திரையை பதித்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அந்த வரிசையில் மேலும் ஒரு ஆக்‌ஷன் படமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது தான் துருவ நட்சத்திரம்.

கவனம் ஈர்த்த விக்ரம் டீசர்

சீயான் விக்ரம் சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு  கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கியது. ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, திவ்யதர்ஷினி, பார்த்திபன், விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்த இப்படம்,  கிட்டத்தட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கிளிம்ப்ஸ், 4 ஆண்டுகளுக்கு முன்பான டீசர் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இரண்டு பாடல்கள் என அனைத்துமே பெரும் வரவேற்றபை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.

7 ஆண்டுகளாக தொடரும் இழுபறி:

இதனிடையே எதிர்பாராத விதமாக, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நிதிப்பற்றாக்குறையால் முடங்கியது. இதனால், விக்ரம் மற்றும் கௌதம் மேனன் இருவரும் தங்கள் வெவ்வேறு படங்களில் பிசியாகினர். இந்நிலையில், இருவரும் இணைந்து பேசி இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்கியதாவும், டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.

முடிவுக்கு வருகிறதா காத்திருப்பு?

தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் பேசிய கௌதம் மேனன், படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியதாகவும், திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் நிலைக்கு முன்னேறிவிட்டதாகவும், ரிலீஸ் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் தான், அடுத்த மாதம் துருவ நட்சத்திரம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Baththa Review: கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
MG Hector Tomahawk EV: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Honda Elevate Facelift Preview: ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
Embed widget