Gayathrie Shankar: காதலில் விழுந்த நடிகை காயத்ரி? பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனுடன் டேட்டிங்... ஷாக்கில் ரசிகர்கள்!
விக்ரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை காயத்ரி ஷங்கர், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடியன் அரவிந்த் எஸ் ஏ உடன் டேட்டிங் செய்து வருவதாகத் தகவல்
‘ப்பா... யாருடா இது... பேய் மாதிரி மேக் அப் போட்டு இருக்கு’ என 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் என்றுமே எவர்கிரீன் ட்ரெண்டிங் வசனம் தான். அப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த காயத்ரி ஷங்கர் ஒரே படத்திலேயே மிகவும் பிரபலமாகிவிட்டார். '18 வயசு' திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் காயத்ரி.
திறமையான நடிகை :
அதைத் தொடர்ந்து ரம்மி, மாமனிதன், பொன்மாலைப் பொழுது, மத்தாப்பு, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்தவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'விக்ரம்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக ஃபஹத் ஃபாசில் ஜோடியாக நடித்திருந்தார். ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்து இருந்தாலும் சிறப்பான நடிப்பை காயத்ரி வெளிப்படுத்தி இருந்தார் எனப் பாராட்டுக்கள் குவிந்தன. மேலும் மற்றொருபுறன் விஜய் சேதுபதியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் காயத்ரி ஷங்கர்.
ஸ்டாண்ட் அப் காமெடியனுடன் டேட்டிங் :
இந்நிலையில், காயத்ரி ஷங்கர் குறித்து வேறு தற்போது ஒரு வதந்தி காட்டுத்தீ போல கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அதாவது அவர் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் அரவிந்த் எஸ் ஏ உடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அரவிந்த் எஸ் ஏவும், காயத்ரி ஷங்கரும் நண்பர்கள் என்றும், இருவரும் சமீப காலமாக டேட்டிங் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. காயத்ரிக்கு, அரவிந்த் மீது காதல் என்பதை காயத்ரியின் நெருங்கிய தோழி ஒருவர் உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இரண்டு தரப்பில் இருந்தும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நடிகை காயத்ரி - அரவிந்த் எஸ் ஏ இருவருக்கும் இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.