Chiyaan 62 : எஸ்.ஜே சூர்யாவைத் தொடர்ந்து விக்ரமுடன் இணைந்த மலையாள நடிகர்... சியான் 62 படத்தின் அப்டேட் இதோ
விக்ரம் நடித்து வரும் சியான் 62 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது

சு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் சியான் 62 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
சியான் 62
நடிகர் விக்ரமின் 62 ஆவது படமாக உருவாகி வரும் படம் சியான் 62. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனமீர்த்த இயக்குநர் சு.அருண்குமார்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். எச்.ஆர் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. மாமனிதன், ஆர்.ஆர்.ஆர், டான், கேப்டன் உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ள இத்தயாரிப்பு நிறுவனம் மும்பைக்கார் மற்றும் தக்ஸ் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் ஏஸ்.ஜே சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு.
National and Kerala state award-winning actor #SurajVenjaramoodu, who has mesmerized us back to back in films like #DrivingLicense #AndroidKunjappan etc., is now on board for #Chiyaan62! @chiyaan @iam_SJSuryah #SUArunKumar @gvprakash @hr_pictures @riyashibu_ @shibuthameens pic.twitter.com/nQIyPAO4x8
— HR Pictures (@hr_pictures) March 3, 2024
தற்போது படக்குழு வெளியிட்டிருக்கும் தகவல்படி பிரபல மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடி இப்படத்தில் இணைந்துள்ளார். மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் உள்ளிட்டப் படங்களில் நடித்து கவனமீர்த்த நடிகர் சூரஜ் . தனது நடிப்பிற்காக தேசிய விருது மற்றும் கேரள அரசின் மாநில விருதையும் வென்றுள்ள சூரஜ் விக்ரமுடன் இப்படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

