Vikram Movie: தியேட்டர் டூ தியேட்டர் மாதிரி... ஓடிடி டூ ஓடிடி.,க்கு தாவும் விக்ரம்!
ஆஹா தமிழ், இந்தியா மற்றும் சீனாவைத் தவிர விக்ரம் திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் தயரித்து நடித்த படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், மாயா, பகத் பாசில், காயத்ரி, ஷிவானி, செம்பன் வினோத், சிறப்பு தோற்றத்தில் சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
View this post on Instagram
உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரைகளில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி, யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து ஆக்ஷன் காட்சிகளில் தோன்றியது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் மார்வல் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து ஈர்க்கப்பட்டு பார்வையாளர்களை லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்று குறிப்பிட வழிவகுத்தது.
Loved being on sets with you and the whole team!! @Dir_Lokesh #Vikram https://t.co/xUSByjl2fI
— Suriya Sivakumar (@Suriya_offl) June 1, 2022
கிளைமேக்ஸில் 5 நிமிடங்கள் மட்டுமே வரும் நடிகர் சூர்யா, ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு இவரை விட யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு அல்டிமேட்டாக நடித்து அப்லாஸ் வாங்கினார். இதுபோல பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் ஆஹா தமிழ், இந்தியா மற்றும் சீனாவைத் தவிர விக்ரம் திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது. ஆஹா தமிழ்த் திரையின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் படத்தை ரசிக்க முடியும்.
Aarambikkalangala? The 🦅 is coming to aha screens worldwide (except India and China).#Vikram - Streaming soon on @ahatamil@ikamalhaasan @Dir_Lokesh @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @anirudhofficial @RKFI @turmericmediaTM @Pulse_ThumbRule @ahavideoIN pic.twitter.com/M77cfFY3pt
— aha Tamil (@ahatamil) August 17, 2022
ஆஹா என்பது ஒரு இந்திய சந்தா வீடியோ ஆன்-டிமாண்ட் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவையாகும், இது தெலுங்கு மற்றும் தமிழ் மொழி நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
The Lion Leads the way with Supremacy...#75DaysofVikram #KamalHaasan #Vikram #VikramRoaringSuccess #VikramAllTimeRecord #Megablockbuster@ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh @Suriya_offl @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @Pulse_ThumbRule pic.twitter.com/VeKQcU8rGv
— Turmeric Media (@turmericmediaTM) August 16, 2022
இன்றுடன் விக்ரம் படம் வெளியாகி 75 நாட்களாகியுள்ளது. இதைக்கொண்டாடும் வகையில் சோனி ம்யூசிக் விக்ரம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் விக்ரம் திரைப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.