மேலும் அறிய

Vijay TV Pugazh: குட்டி மகாராணிக்கு அப்பாவான குக்கு வித் கோமாளி புகழ்... வாழ்த்தும் ரசிகர்கள்!

“இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்...” - புகழ்

Vijay TV Pugazh: தனக்கு மகள் பிறந்து இருப்பதாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் குக் வித் கோமாளி புகழ் அறிவித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அண்மையில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த 1947 ஆகஸ்ட் 15 உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் புகழ் நடித்திருந்தார். 

துணை நடிகராக நடித்து வந்த புகழ் மிஸ்டர் ஜூ கீப்பர், துடிக்கிறது மீசை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பென்ஸியாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில் திண்டிவனம் அருகே இருக்கும் தீவனூரில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. அதில், இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் புகழ், கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் போட்டோஷூட் நடித்தி தான் அப்பாவாகப் போகிறேன் என அறிவித்திருந்தார். அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் தனக்கு மகள் பிறந்திருப்பதாக இன்ஸ்டகிராம் பதிவு  மூலம் புகழ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள்.. என் மகளே.. தாயும் சேயும் நலம்” எனக் கூறியுள்ளார். இதனால் குட்டி தேவதைக்கு அப்பாவாகி இருக்கும் புகழுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

மேலும் படிக்க: A.R. Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது பண மோசடி புகார் - நடந்தது என்ன?

Actor Vijay on Jawan: ஜவான் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன விஜய் - தீயாய் பரவும் ட்விட்டர் பதிவு

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget