IFFK awards: கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான விஜய் சேதுபதி படம்!
IFFK awards: கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி - நித்யா மேனனின் 19 (1)(a) திரைப்படம்.
![IFFK awards: கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான விஜய் சேதுபதி படம்! Vijay Sethupathi -Nithya menon starring mollywod film 19(1)(a) is been selected at IFFK awards IFFK awards: கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான விஜய் சேதுபதி படம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/14/bbcc5c75a79fa2ccbf7526c1daf4bd251665734579602224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி - நித்யா மேனனின் 19 (1)(a) திரைப்படம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கெத்தாக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. மலையாளத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் 19 (1)(a). இந்த அருமையான திரைப்படம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் விஜய் சேதுபதியின் மாலிவூட் பிரவேசம் :
ஆன்டோ ஜோசப் மற்றும் நீதா பின்டோ தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இந்து. VS இயக்கத்தில் வெளியான திரைப்படம் 19 (1)(a). விஜய் சேதுபதி நடித்த இரண்டாவது மலையாள திரைப்படம் இதுவாகும். இவர் இப்படத்திற்கு முன்னர் 2019ம் ஆண்டு வெளியான "மார்க்கோனி மத்தாய்" திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த 19 (1)(a) திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
ரிலீஸ் முன்பே அமோக வரவேற்பு பெற்ற படம் :
19 (1)(a) படத்தின் டீசர் வெளியான நாள் முதல் படத்திற்கான எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு எழுத்தாளராகவும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நித்யா மேனன் ஒரு டெலிபோன் பூத் மற்றும் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணாகவும் நடித்திருந்தார். கண்களாலேயே பேசக்கூடிய நித்யா மேனனின் அபாரமான நடிப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். விஜய் சேதுபதி - நித்யா மேனன் கூட்டணியில் உருவான இப்படம் பலரின் பாராட்டைப் பெற்றது.
View this post on Instagram
IFFK வில் செலக்ட் செய்யப்பட்ட 19 (1)(a):
கேரளாவில் ஆண்டுதோறும் கேரளா சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் செலெக்ஷன் செய்யப்பட்ட படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதி -நித்யா மேனன் நடிப்பில் வெளியான 19 (1)(a) படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நித்யா மேனன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)