Master Movie : மஜா மாஸ்டரின் 4வது ஆண்டு.. தியேட்டர்களை காப்பாற்றிய விஜய்.. மாஸ்டர் வெளிவந்த கதை!
Vijay : மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிட நல்ல விலை வந்த போதும் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்ததாக இணை தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்திருந்தார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த 2021 ஆம் வெளியான திரைப்படம் மாஸ்டர்,விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், மாளவிகா, சாந்தனு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்த இந்த படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டியோ மற்றும் சேவியர் பிரிட்டோவின் XB ஸ்டியோஸ் இந்த படத்தை இணைந்து தயாரித்தனர்.
Survival first! Celebration next!#master will rise on the right time!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 9, 2020
stay home stay safe! pic.twitter.com/g9CeHfHQcT
முதலில் இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் கோவிட் 19 பெருந்தோற்றின் காரணமாக வழங்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக மாஸ்டர் படம் வெளியாக தாமதமானது. செப்டம்பரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பட்டாலும் திரையரங்குகளை திறக்க அரசு தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
ஓடிடியில் வெளியான படங்கள்:
அந்த ஆண்டில் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தது, நடிகர் சூர்யாவின் சூரரை போற்று முதலிய படங்கள் ஓடிடியில் வெளியானது. இதனால் மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகள் 50% சதவீகித பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது சிறிய பட்ஜெட் படங்கள் வெளியானாலும், மக்கள் கொரோனா அச்சம் காரணமாக திரையரங்களுக்கு வர தயக்கம் காட்டினார்.
இதையும் படிங்க: அந்த நடிகை பாவம் சார்...பாலையா செய்யும் டார்ச்சரை நீங்களே பாருங்க
மறுவாழ்வு கொடுத்த மாஸ்டர்:
இந்த நிலையில் ஜனவரி ஆம் தேதி 2021 பொங்கல் வெளியீடாக மாஸ்டர் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பல தடைகளை கடந்து மாஸ்டர் வெளியானது, திரையரங்களுக்கு மக்கள் வர மாட்டார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் படம் என்பதால் மக்கள் திரையரங்குகளை படையெடுத்தனர். படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு மறுவாழ்வை மாஸ்டர் திரைப்படம் கொடுத்தது.
4 years of this absolute 'Master'piece !! 💥💥
— Seven Screen Studio (@7screenstudio) January 13, 2025
A film, a journey, and a character (JD) that remain etched in our hearts forever ♥️♥️#4YearsOfMaster#Thalapathy @actorvijay Sir @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @XBFilmCreators @Jagadishbliss pic.twitter.com/p2PXMWadPX
இந்த படத்தை ஓடிடியில் வெளியிட நல்ல விலை வந்த போதும் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்ததாக இணை தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்திருந்தார். மேலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் இந்த நல்ல கலெக்ஷனை அள்ளியது. மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 220-230 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.






















