மேலும் அறிய

விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Shakthi thirumagan Ott Release : அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள சக்தி திருமகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது

விஜய் ஆண்டனி நடித்து கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் சக்தி திருமகன். திரையரங்கில் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது கூடிய விரைவில் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது

சக்தி திருமகன் 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் விஜய் ஆண்டனி. பிரபல இசையமைப்பாளரான இவர் நடிகராக உருவெடுத்த பிறகு தேர்வு செய்து நடிக்கும் படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் . அருவி , வாழ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அருண் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து அவரே இசையமைத்தும் இருக்கிறார். முன்னதாக படத்திற்கு பராசக்தி என்று படக்குழு டைட்டில் வைத்திருந்தனர். ஆனால் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு இந்த டைட்டிலை ஏவிஎம் நிறுவனம் அனுமதி வழங்கியிருந்தது. இதனால் படத்தின் அறிவிப்பு வெளியானபோது இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டு பின் சக்தி திருமகன் என படத்திற்கு பெயர் மாற்றப்பட்டது.

இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கிரண், ரினி, ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி நடித்த நான் , சலிம் , பிச்சைக்காரன் ஆகிய படங்கள் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றன. இந்த படங்கள் தவிர்த்து அவர் நடித்த பிற படங்கள் பெரியளவில் கவனமீர்க்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மார்கன் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று பாராட்டுக்களை அள்ளியது. தொடர்ந்து வெளியான சக்தி திருமகன் படமும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. விறுவிறுப்பான அரசியல் களம் , சுவாரஸ்யமான திரைக்கதை என கதை நகர்வதே தெரியாமல் பார்வையாளர்களை ஒன்ற வைத்தது சக்தி திருமகன். 

ஓடிடி ரிலீஸ் 

வரும் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் சக்தி திருமகன் வெளியாக இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP: ''இதான் ஆரம்பம்; இன்னும் 2 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
CJP: ''இதான் ஆரம்பம்; இன்னும் 2 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Embed widget