Vidya Balan: “அது நம் கண்களுக்கு விருந்து” - ரன்வீர்சிங் நிர்வாண போட்டோவிற்கு குரல் கொடுத்த வித்யா பாலன்..!
ரன்வீர் சிங் நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையான நிலையில், அவருக்கு ஆதரவாக பிரபல நடிகை வித்யா பாலன் குரல் கொடுத்துள்ளார்.
ரன்வீர் சிங் நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையான நிலையில், அவருக்கு ஆதரவாக பிரபல நடிகை வித்யா பாலன் குரல் கொடுத்துள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் இது குறித்து அவர் பேசும் போது, “ அதில் என்ன பிரச்சினை இருக்கிறது. ஒருவர் இப்படி செய்வது இதுவே முதல் முறை. அது நம்முடைய கண்களுக்கு விருந்துதான்.” என்றார்.
அவர் மீது வழக்குதொடரப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போது, “ வழக்குப்பதிவு செய்வதர்களுக்கு ஒருவேளை பெரிதாக வேலை இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறார்கள். அவை பிடிக்கவில்லை என்றால், பேப்பரை மூடி விட்டு செல்லலாம், தூக்கி எறிந்துவிட்டு செல்லலாம். அது அவர்கள் விருப்பம். ஏன் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
View this post on Instagram
முன்னதாக, ரன்வீர் சிங் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது பன்முக நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வார். சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 83 திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இதில் ரன்வீர் சிங் அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்ததை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
சினிமாவில் நடிக்கும் அதே சமயம் அவருக்கு மாடலிங் மீதும் ஈர்ப்பு அதிகம். அதற்காக அவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அதற்காக தனது ஹேர் ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் என பல வெரைட்டி காட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடத்திய நிர்வாண போட்டோஷூட் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக 1972ஆம் ஆண்டு அமெரிக்காவின் காஸ்மோபோலிட்டன் இதழுக்கு ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds) கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் வகையில் ரன்வீர் சிங் நிர்வாண ஃபோட்டோஷூட்டை நடத்தியிருந்தார்.
இதையடுத்து, பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு, நாடு முழுவதும் பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன