Watch Video: நான் இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்... வைரலாகும் நடிகையின் வீடியோ !
நடிகை ஒருவர் யோகா செய்யும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருபவர் மனீஷா யாதவ்.இவர் தமிழில் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி சில பதிவுகளை செய்து வருகிறார். அந்தப் பதவுகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது அவர் யோகா செய்யும் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் யோகாசனங்கள் செய்வது போல் வீடியோ ஒன்றும் உள்ளது. மேலும் அந்த வீடியோவில் சில வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, “நான் வேலையாக இருக்கிறேன் என்று பொய்யாக கூறினேன். ஏனென்றால் நான் அவர்கள் நினைத்த வேலையை செய்யவில்லை. நான் என்னுடைய மனதை சரி செய்யவும், என்னுடைய மனதை ஒரு நிலை படுத்தவும் முயற்சி செய்து வந்தேன்.
View this post on Instagram
ஆகவே இந்தப் பொய் கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிவில் மலைகளுக்கு நடுவே என்னுடைய யோகா பயிற்சி என்று கூறி பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவை பலரும் பாராட்டி சில கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:மார்ச் 25-ல் ஓ.டி.டி. தளத்தில் ரிலீசாகிறது வலிமை..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்