மேலும் அறிய

Valimai OTT Release : மார்ச் 25-ல் ஓ.டி.டி. தளத்தில் ரிலீசாகிறது வலிமை..!

Valimai OTT Release : நடிகர் அஜித் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான வலிமை திரைப்படம் வரும் 25-ந் தேதி முதல் ஓ.டி.டி.யில் ரிலீசாக உள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகிய படம் வலிமை. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரண்டரை ஆண்டுகள் படப்பிடிப்பில் இருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு யூ டியூப் விமர்சகர்கள் பலரும் கலவையான விமர்சனங்கள் அளித்தபோதிலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வலிமை பிளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்தது. இதனால், வலிமை படம் ரூபாய் 200 கோடி வசூலைக் கடந்தும் 25வது நாளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


Valimai OTT Release : மார்ச் 25-ல் ஓ.டி.டி. தளத்தில் ரிலீசாகிறது வலிமை..!

வலிமை படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூரும், ஜூ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில், வலிமை திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் எப்போது வெளியாகும் என்று இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வலிமை திரைப்படம் வரும் 25-ந் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது. வலிமை அறிவிப்பை முன்னிட்டு சென்னையின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான நந்தனம் மைதானத்தில் 10 ஆயிரம் சதுர அடி அளவிலான வலிமை படத்தின் பிரம்மாண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரைச் சுற்றிலும் அஜித் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.


Valimai OTT Release : மார்ச் 25-ல் ஓ.டி.டி. தளத்தில் ரிலீசாகிறது வலிமை..!

வலிமை படத்தின் ஓடிடி அறிவிப்பை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அருமையான சமூக கருத்துடன் வெளியாகிய வலிமை திரைப்படம் பல சோதனைகளை கடந்து திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா மற்றும் ஜிப்ரான் இருவரும் இசையமைத்திருந்தனர். படத்தில் இடம்பெற்றிருந்த ஸ்டண்ட் மற்றும் பைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது.

வலிமை படத்தின் 25ம் நாளான இன்று வலிமையின் ஓடிடி அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எச்.வினோத் படத்திற்காக அஜித்தின் புதிய கெட்டப் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
Embed widget