Vetrimaaran Vijay Movie: கதை ரெடி ... கதாநாயகன் ரெடியா..? நடிகர் விஜய்க்கு கதை சொல்ல தயாரான வெற்றிமாறன்?
நடிகர் விஜய்க்காக இயக்குநர் வெற்றிமாறன் ஒரு கதையை தயாரித்துவிட்டதாகவும், விரைவில் அந்த கதையை விஜயிடம் சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக தற்போது பார்க்கப்படுபவர்களில் வெற்றிமாறனும் ஒருவர். தான் இயக்குநராக அறிமுகமான பொல்லாதவன் படத்தில் பல்சர் பைக்கை வைத்து கதை களத்தை அமைத்திருப்பார் வெற்றிமாறன். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிக்குபிறகு ஆடுகளம் படத்தை இயக்கினார்.
ஆடுகளம் படத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் திரைக்கதைக்கான விருதையும் வென்றார், அதே படத்திற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றார்.
தொடர்ந்து ‘விசாரணை’ ‘ வட சென்னை’, ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் அசுரன் படத்திற்காக மீண்டும் அவருக்கு தேசிய விருது மீண்டும் வழங்கப்பட்டது. தற்போது வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
விடுதலை படத்தின் தொடர்ச்சியாக இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான படப்பிடிப்பு புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் நடிகர் விஜய்க்காக இயக்குநர் வெற்றிமாறன் ஒரு கதையை தயாரித்துவிட்டதாகவும், விரைவில் அந்த கதையை விஜயிடம் சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக இயக்குநர் வெற்றி மாறன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், இதற்கு முன்பாக தளபதி விஜய்யுடன் ஒரு கதையை சொன்னேன். அது வேறு சில காரணங்களால் நடக்கவில்லை. மீண்டும் வேறு ஒரு கதையை சொல்லி இருவரும் இணைந்து விரைவில் ஒரு படத்தை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.
தற்போது அந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கதை மட்டும் நடிகர் விஜய்க்கு பிடித்துவிட்டால் இது மிகவும் எதிர்பார்க்கப்படும் காம்போக்களில் ஒன்றாக இருக்கும்.
நடிகர் விஜய் தற்போது வம்சி பைடப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு, பிரபு மற்றும் பலர் நடிக்க, தமன் இசையமைத்துள்ளார். இப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டருக்குப் பிறகு தளபதி விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் நடிகர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி தளபதி 66 மற்றும் 67 இல் இருந்து அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்