மேலும் அறிய

Sathyaraj On Veetla Vishesham : பாவம் மூஞ்சி சத்யராஜ்.. கவுண்டமணி காமெடி.. ஆர்.ஜே பாலாஜி படத்துக்கு சத்யராஜ் கொடுத்த அப்டேட்..

நடிகர் சத்யராஜ் நடிப்பில், வரும் 17, 2022 ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பன்முக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான சத்யராஜ் நடிப்பில், வரும் 17, 2022 அன்று வரவிருக்கும் திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ வெளியீட்டை ஒட்டி, அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

ஆர்.ஜே. பாலாஜி- சத்யராஜ்
ஆர்.ஜே. பாலாஜி- சத்யராஜ்

படம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது, “இந்த ரீமேக் உருவாகும் முன்பே, பதாய் ஹோ திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன், அதன் உள்ளடக்கம் மற்றும் அவர்கள் அதை வழங்கிய விதம் ஆகியவற்றால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஆனால், ரீமேக்குக்காக RJ பாலாஜி என்னை அணுகியபோது, அந்த கதாபாத்திரத்தை முழுமையாக என்னால் வெளிப்படுத்த முடியுமா என்று என் மனம் சற்று தயக்கம் கொண்டது. ஏனென்றால், பார்வையாளர்கள் என்னை மென்மையான, முரட்டுத்தனமான மற்றும் கடினமான பாத்திரங்களில் பார்த்திருக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் அத்தகைய கதாபாத்திரத்தில் இல்லை. ‘பாவம் மூஞ்சி’ சத்யராஜை (அப்பாவி ) கொண்டு வர வேண்டும் என்று பாலாஜி என்னிடம் சொன்னார்.

வீட்ல விசேஷம் பட குழுவினர்
வீட்ல விசேஷம் பட குழுவினர்

கவுண்டமணி சாருடன் நான் நடித்த சில வேடிக்கையான காட்சிகளை அவர் குறிப்பிட்டார், அதில்  எனது கதாபாத்திரம் ஒரு அப்பாவி குழந்தையாக நடந்து கொள்ளும். அதேசமயம், என் பொம்முகுட்டி அம்மாவுக்கு படத்தில் வரும் என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பை கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரு இயக்குனருக்கு இவ்வளவு சரியான தெளிவு இருந்தால், அது நடிகர்களுக்கு எளிதான காரியமாகிவிடும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த பாத்திரத்தில் நடிக்க இது எனக்கு மிகவும் உதவியது. மேலும், ஊர்வசி மேடம் ஒரு சிறந்த கலைஞர், மேலும் அவரது நடிப்பு திரையரங்குகளில் பெரிய  பாராட்டுகளை பெறும்.

ஊர்வசி- சத்யராஜ்
ஊர்வசி- சத்யராஜ்

தமிழ் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, ​​“இந்தியா முழுவதும் கலாச்சார மற்றும் உறவுமுறை மதிப்புகளில் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. குடும்ப அமைப்பு முற்றிலும் ஒரே மாதிரியானது, அதை சித்தரிப்பதில் பெரிய வித்தியாசத்தை நான் உணரவில்லை. ஆம், நிச்சயமாக, RJ பாலாஜி மற்றும் அவரது குழுவினர் சில அம்சங்களை சேர்த்துள்ளனர், இது ஒரிஜினல் பதிப்பை விட பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என தயாரிப்பாளர்களால் பாராட்டப்பட்டுள்ளது. வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாக பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும்.”

சத்யராஜ்
சத்யராஜ்

வீட்ல விசேஷம் படத்தை RJ பாலாஜி-NJ சரவணன் இயக்கியுள்ளனர், Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர், Romeo Pictures இணைந்து தயாரித்துள்ளனர்.  இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பதாய் ஹோ’  படத்தின் ரீமேக்கான இப்படத்தில்  RJ .பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, VMC  லலிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வீட்ல விசேஷம் வரும் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்DMK MLA VS People: ’’யாருக்கு வேணும் உன் சோறு..!’’Mla-வை சுத்துப்போட்ட பெண்கள்கடும் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
‘’விடியா திமுக அரசே.. மக்கள் உயிரோடு விளையாடுவதா?’’- ஈபிஎஸ் கடும் சாடல்!
‘’விடியா திமுக அரசே.. மக்கள் உயிரோடு விளையாடுவதா?’’- ஈபிஎஸ் கடும் சாடல்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
Embed widget