Varisu vs Thunivu: விஜய், அஜித் பேனர்கள் கிழிப்பு... ரோகிணி தியேட்டரில் ரசிகர்கள் மோதல்.. போலீஸ் தடியடி..
சென்னை ரோகிணி தியேட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
சென்னை ரோகிணி தியேட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் பொங்கல் வெளியீடாக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
4am Show ah வச்சிட்டு பேனர கிழிச்சுட்டு இருந்தானுக போல rohini la
— தல அரவிந்த் (@aravinth43AK) January 10, 2023
போலீஸ் அடிச்சு தொரத்திட்டானுகளாம் தேவாங்குகள
ஒரே மயான அமைதி 😂😂😂😂😂#Thunivu pic.twitter.com/u7fBeI9RHW
இதேபோல் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படமும் இன்று வெளியானது. வாரிசு படத்தின் முதல் காட்சி 4 மணிக்கு திரையிடப்பட்டது.
பசங்க சம்பவம்..! 😂🔥 #ThunivuFDFS #VarisuFDFS pic.twitter.com/rct1IOLiGd
— Vj prakash vfc ✞ (@vj_prakash_vfc1) January 10, 2023
இதனால் இரு நடிகர்களின் ரசிகர்ளும் நேற்று மாலை முதலே தியேட்டர்களை ஆக்கிரமிக்க தொடங்கினர். டிஜே, செண்டை மேளம் என களைக்கட்டிய தியேட்டர் வளாகம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது. இதனிடையே சென்னையில் பிரபலமான ரோகிணி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்களை அஜித் ரசிகர்கள் கிழித்தனர்.
Before 2 Hours 💥💥💥💥💥💥...#ThunivuAtRohini@RohiniSilverScr Celebration fort for all Fans so it's call #FansFortRohini
— Arun Suriya (@ArunSuriya_K) January 10, 2023
💞💞💞#PongalThiruvizhaAtRohini#TheFanBoyAtRohini pic.twitter.com/N3Ri0kHCF7
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த அஜித் பேனர்களை கிழித்தெறிந்தனர். இந்த சம்பவத்தில் ரோகிணி தியேட்டர் உள்ளே சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.