சிவாஜி கணேசன் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை 3 கல்யாணம் செய்த விஜய் பட ஹீரோயினா?
சிவாஜி கணேசன் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை உங்களுக்கு யார் என்று தெரிகிறதா? இந்த குழந்தை தான் விஜய் படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

பொதுவாக பிரபலங்கள் பலரும் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே சினிமாவில் நடித்துள்ளனர். அவர்களை முன்னணி நடிகர்கள் சிலர் கையில் தூக்கி வைத்து கொஞ்சுவது வழக்கம். ஆனால் இந்த நடிகை குழந்தை நட்சத்திரம் இல்லை. சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவரின் மகள் தான்.
இந்த கியூட் குழந்தை வேறு யாரும் அல்ல.... மஞ்சுளா - விஜயகுமாரின் செல்ல மகள் வனிதா விஜயகுமார் தான். இவர், தளபதி விஜய்க்கு ஜோடியாக தன்னுடைய 15 வயதிலேயே சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் மஞ்சுளாவும் நடித்திருப்பார்.

சந்திரலேகா படத்திற்கு பிறகு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் படத்தில் வனிதா விஜயகுமார் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகியம் மொழிகளிலும் தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். இதன் பின்னர் ஆகாஷ் என்பவரை 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு... அதே ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார்.
அந்த திருமணமும் விவாகரத்தில் முடிய, 5 ஆண்டுகளுக்கு பிறகு பீட்டர் பாலை திருமணம் செய்தார். இந்த திருமணமும் 2 மாதத்தில் முடிவுக்கு வந்தது. இப்போது வனிதா விஜயகுமார் தமிழ் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருகிறார். பிக்பாஸ் மூலம் மீண்டும் திரைப்பட வாய்ப்புகளை கை பற்றிய வனிதா விஜயகுமார்... தற்போது மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்கிற படத்தை இயக்கி அதில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் தான் சிவாஜி கணேசனுடன், வனிதா விஜயகுமார் இருக்கும் கியூட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. 3 திருமணம் செய்து கொண்டும் முரட்டு சிங்கிளாக மகளுடன் வாழ்ந்து வரும் வனிதாவுக்கு.... அவரின் குடும்பமும் கை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய தந்தையால் வீட்டை விட்டே வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





















