மேலும் அறிய

Watch video : ஆரம்பிச்சுட்டாங்களா! ஜோவிகாவின் அப்பா அனுப்பியதாக வீடியோ போஸ்ட் செய்த வனிதா...    

ஜோவிகாவின் அப்பா அனுப்பியதாக சொல்லி வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் வனிதா. 

விஜய் டிவியில் கடந்த வாரம் கோலாகலமாக துவங்கியுள்ளது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி மனக்கசப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆறு சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டை சச்சரவுக்கு பஞ்சமே இல்லை. 

இந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கடந்த இரு தினங்களாக ஜோவிகா பள்ளிப்படிப்பை கூட முடிக்காதது குறித்து பேச்சுகள் பூதாகாரம்  எடுத்து பெரிய சர்ச்சையாக வெடித்து வருகிறது. 

Watch video : ஆரம்பிச்சுட்டாங்களா! ஜோவிகாவின் அப்பா அனுப்பியதாக வீடியோ போஸ்ட் செய்த வனிதா...    

கடும் வாக்குவாதம் :

அந்த வகையில் நேற்றைய எபிசோடில்  பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான விசித்திராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. ஜோவிகா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே தனது இன்ட்ரோ வீடியோவிலேயே தனக்கு படிப்பு வராததால் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறி இருந்தார். ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை அதனால் அதை நிறுத்திவிட்டேன் என வெளிப்படையாக கூறும் போது அதை அவர் மேல் திணிக்கும் வகையில் விசித்திரா, யுகேந்திரன்  உள்ளிட்ட போட்டியாளர்கள் பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Watch video : ஆரம்பிச்சுட்டாங்களா! ஜோவிகாவின் அப்பா அனுப்பியதாக வீடியோ போஸ்ட் செய்த வனிதா...    

ஜோவிகாவிடம்  அடிப்படை கல்வி அவசியம், நீ தமிழில் எழுதி காட்டு என விசித்திரா வற்புறுத்த நான் எழுத முடியாது. நான் ஏன் எழுதி காட்ட வேண்டும். எனக்கு வராத ஒன்றை எதற்காக நான் செய்யணும். படிப்பு ஒன்று தான் வாழ்க்கையா? அதையும் தாண்டி பல திறமைகள் இருக்கிறது. நமக்கு இருக்கும் திறமைகளை வளர்த்து கொண்டு அதன்படி வாழ்க்கையில் முன்னேறி கொண்டு போகலாம். எனக்காக எங்க அம்மா எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாங்க அப்பவும் என்னால முடியல என தெரிந்ததும் அதை விட்டுவிட சொல்லிட்டு எனக்கு பிடிச்சதை செய்ய எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. இதில் என்ன தப்பு இருக்கு என விசித்திராவுக்கு சரியான பதிலடி கொடுத்தார் ஜோவிகா.

வனிதாவின் போஸ்ட் :

பிக் பாஸ் வீட்டில் ஜோவிகாவை வைத்து பெரும் வாக்குவாதம் நடைபெற்று வரும் இந்த சூழலில் ஜோவிகாவின் அம்மாவும் நடிகையுமான வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கம் மூலம் ஜோவிகாவின் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். "ஜோவிகாவின் அப்பா இந்த வீடியோவை அப்லோட் செய்யுமாறு கூறி அனுப்பியுள்ளார்" என கூறி ஜோவிகா தமிழில் வாசிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எது சிறந்தது என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளுங்கள்" என்ற குறிப்பை எழுதி கமல்ஹாசன் சார் ஆரம்பிலாங்களா! என எழுதியுள்ளார். 

வனிதாவின் இந்த போஸ்டுக்கு ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள் ரசிகர்கள். விசித்திராவின் பசங்களுக்கு தமிழே பேச தெரியாது இதுல இவங்க ஜோவிகாவை பேசுறாங்களா என கமெண்ட் மூலம் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த கமெண்டும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget