Vani Jayaram Songs: ’மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என தொடங்கிய குரல்... வாணி ஜெயராம் டாப் 5 பாடல்கள்!
வாணி ஜெயராம் நினைவை போற்றும்வகையில் அவர் பாடிய டாப் 5 பாடல்களில் பட்டியலை காணலாம்.
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
வீட்டின் உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. மற்றொரு சாவி மூலம் உறவினர்கள் திறந்து பார்த்தபோது நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இந்தநிலையில், வாணி ஜெயராம் நினைவை போற்றும் வகையில் அவர் பாடிய டாப் 5 பாடல்களில் பட்டியலை காணலாம்.
முதல் பாடல் - ரே பப்பி ஹரா
கடந்த 1971 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘குட்டி’ படத்தில் போலே ’ரே பப்பி ஹரா’ என்ற பாடலை பாடி சினிமா துறையில் பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார். இந்த பாடலானது சினிமா ரசிகர்களால் அதிக கொண்டாடப்பட்ட நிலையில், அனைத்து இசையமைப்பாளர்களும் வாணி ஜெயராமனின் வீட்டின் கதவை தட்டத் தொடங்கினர்.
மல்லிகை என் மன்னன்:
கடந்த 1974 ம் ஆண்டு வெளியான தீர்க்கசுமங்கலி படத்தில், M.S.விஸ்வநாதன் இசையில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்று வாணி ஜெயராம் பாடிய பாடல் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.
அந்த பாடலில் இருந்து இதோ சில பாடல் வரிகள்:
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
One of my favourite singers Vani Jairam passes away, and just two days after K Viswanath gaaru passed away, for whom she sang those memorable songs in Swathikiranam and Shankarabharanam. And she had just got the Padma Bhushan recently. pic.twitter.com/TtYWtCyB0n
— Lone Wolf Ratnakar (@SadaaShree) February 4, 2023
மாசி மாச கடைசியிலே:
பாடல் : மாசி மாசா
திரைப்படம் : பல்லாண்டு வாழ்க 1975
நட்சத்திர நடிகர்கள்: எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் லதா
பாடியவர்: வாணி ஜெயராம்
இசையமைத்தவர்: கே.வி.மகாதேவன்
பாடல் வரிகள்: புலமை பித்தன்
அந்த பாடலில் இருந்து இதோ சில பாடல் வரிகள்:
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
மாசி மாசக் கடைசியிலே
மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பரிசம் போட்டாரு
ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம்
சந்திக்க சொன்னாரு
அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து
என்னையும் பாத்தாரு
ஏழு ஸ்வரங்களுக்குள்:
பாடல் : ஏழு ஸ்வரங்களுக்குள்
திரைப்படம் : அபூர்வ ராகங்கள் 1975
நட்சத்திர நடிகர்கள்: கமல்ஹாசன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீவித்யா, நாகேஷ், ரஜினிகாந்த் மற்றும் ஜெயசுதா
பாடியவர்: வாணி ஜெயராம்
இசையமைத்தவர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
அந்த பாடலில் இருந்து இதோ சில பாடல் வரிகள்:
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம்
என்னுள் எங்கோ:
பாடல் : என்னுள் எங்கோ
திரைப்படம் : ரோசாபூ ரவிகைகாரி 1979
நட்சத்திர நடிகர்கள்: சிவகுமார் மற்றும் தீபா
பாடியவர்: வாணி ஜெயராம்
இசையமைத்தவர்: இளையராஜா
பாடல் வரிகள்: கங்கை அமரன்
அந்த பாடலில் இருந்து இதோ சில பாடல் வரிகள்:
என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது
என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்
ஆஆ …ஆஆ.ஆஆஅஆஆ
பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின்
போதையிலே மனம்
பொங்கி நிற்க தங்கி நிற்க
காலம் இன்றே சேராதோ