மேலும் அறிய

Vaathi First Single: தனுஷ் பாட... ஜிவி மியூசிக் போட.. வாத்தி முதல் பாடலை பார்த்து மகிழுங்க!

வாத்தி திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'வா வாத்தி' பாடலின் சில வரிகளை நடிகர் தனுஷ் பாட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். வாத்தி திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'வா வாத்தி' பாடலின் சில வரிகளை நடிகர் தனுஷ் பாட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

வாத்தி திரைப்படத்தின் முதல் சிங்கள் டிராக் தமிழில் 'வா வாத்தி' என்றும் தெலுங்கில் 'மாஸ்டரு' எனவும் வரவுள்ளது. இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடகி ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். வரும் 10 ஆம் தேதி இந்த பாடல் வெளியாக உள்ள நிலையில், அந்த பாடலில் இருந்து சில வரிகளுக்கு ஜிவி இசையமைக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனுஷ் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  

 தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி (Venky Atluri) இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வாத்தி படம் வெளியாக உள்ளது.  கல்வி என்பது பாடப்புத்தில் இருப்பது மட்டும் இல்லை. கல்வி என்பது புத்தகங்கள், மார்க் மற்றும் தேர்வு முடிவுகள் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு படத்தின் தயாரிப்பாளரான சித்தாரா எண்டர்டெய்ண்மெண்ட் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருந்தார். 


Vaathi First Single: தனுஷ் பாட... ஜிவி மியூசிக் போட.. வாத்தி முதல் பாடலை பார்த்து மகிழுங்க!

இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

வாத்தி திரைப்படம் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவில்லை என்று 

வெளியான செய்தி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் 'வாத்தி' என்ற தலைப்பிலும் தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பிலும் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.  

கல்வி சார்ந்த திரைப்படமாக இருப்பினும், அதன் பின்னணியில் அரசியல் பேசும் ஒரு திரைப்படமாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் டோலிவுட்டில் பல திரைப்படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்பதால் வாத்தி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என தெரிகிறது. விரைவில் இது குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா இந்த ஆண்டு பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அதில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' உள்ளிட்ட படங்களும் அடங்கும். நடிகர் தனுஷிற்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அவரின் நடிப்பில் வெளியான இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு,  ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை ஈட்டியது. 

 

 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget