மேலும் அறிய

பவன் கல்யாண் படத்தை இப்படி பாக்காதீங்க! ‘ஸ்கெட்ச்’.. உஷார் மக்களே! 3 லட்சம் அபராதம் பாயும்!

'உஸ்தாத் பகத் சிங்' திரைப்பட படத்தை பைரசியில் பார்த்து சிக்கினால் 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது படத்தின் மொத்த பட்ஜெட்டில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பவன் கல்யாண் நடிப்பில் உருவான 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்படம் உகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியானது. ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' படத்துடன் மோதிய போதிலும், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தொடக்கத்தைப் பெற்றுள்ளது. சாக்னில்க் (Sacnilk) வழங்கிய ஆரம்பக்கால தரவுகளின்படி, படம் வெளியான முதல் நாள் மதியம் 1 மணிக்குள் சுமார் 9.94 கோடி ரூபாய் வசூலை எட்டியது. சுமார் 2,064 காட்சிகளில் 60.7 சதவீத இருக்கைகள் நிரம்பி பவன் கல்யாணின் செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.

மகிழ்ச்சியில் படக்குழு.. அதிர்ச்சி கொடுத்த பைரசி!

படம் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியை நோக்கிச் செல்லும் அதே வேளையில், திரையுலகைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் 'பைரசி'  இத்திரைப்படத்தையும் விட்டுவைக்கவில்லை. படம் வெளியான சில மணிநேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ், ஃபிலிமிசில்லா , மூவிரூல்ஸ்  போன்ற இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்துள்ளது. 'உஸ்தாத் பகத் சிங் முழுத் திரைப்படம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய' என்ற தேடல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருவது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபத்தை விளைவிக்கும் டொரண்ட் தளங்கள்

வெறும் குறைந்த தரத்தில்  தொடங்கும் இந்தப் பதிவுகள், சில மணிநேரங்களில் எச்டி (HD) தரத்திற்கு மாற்றப்பட்டு டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் எளிதாகப் பரப்பப்படுகின்றன. ஆனால் இத்தகைய தளங்களைப் பயன்படுத்துவது சட்ட ரீதியாக மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் ஆபத்தானது. இத்தளங்களில் உள்ள தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் 'மால்வேர்' இணைப்புகள் உங்கள் செல்போன் தரவுகளைத் திருடவோ அல்லது நிதி மோசடிகளுக்கு உள்ளாக்கவோ வாய்ப்புள்ளது.

சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும்?

இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்படி, திருட்டுத் தளங்களில் படங்களைப் பார்ப்பதோ அல்லது பதிவிறக்கம் செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். இதில் சிக்கினால் 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது படத்தின் மொத்த பட்ஜெட்டில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் பின்னால் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. எனவே ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான நடிகரின் படத்தைத் திரையரங்குகளில் அல்லது அதிகாரப்பூர்வ ஓடிடி தளங்களில் மட்டுமே பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget