என்னை மன்னியுங்கள்! இனி நான் புது உர்ஃபி... ட்வீட் பார்த்து குழம்பிய ரசிகர்கள்... இனி என்ன நடக்கபோகுதோ!
பேஷன் என்ற பெயரில் தாறுமாறாக உடை அணிந்து ட்ரெண்டிங்கில் இருந்த உர்ஃபி ஜாவேத் ட்விட்டர் மூலம் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளது.
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 24x7 பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது முதல் பாலிவுட்டின் சமீபத்திய ஃபேஷன் சென்சேஷனாக வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் எதை செய்தாலும் அது ஹிட்!
அசாதாரணமான பேஷன் சென்ஸ் மற்றும் துணிச்சலான உடை தேர்வுகளுக்கு பிரபலமான உர்ஃபி ஜாவேத் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தாலும் மறுபுறம் அவரை படு பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள் இணையவாசிகள். என்ன தான் ட்ரோல் செய்தாலும் படும் பங்கமாக கலாய்த்தாலும் கொஞ்சமும் அசராமல் கடமையின் மேல் கண்ணும் கருத்துமாக இருப்பவர் உர்ஃபி ஜாவேத்.
அதிர்ச்சியளித்த உர்ஃபி லேட்டஸ்ட் ட்வீட் :
தனது ஆடை தேர்வுகள் குறித்த அப்டேட்டைப் போஸ்ட் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உர்ஃபி ஜாவேத் வெள்ளிக்கிழமை மாலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார். "பேஷன் என்ற பெயரில் தனக்கு விருப்பமான ஆடைகளை அணிந்து அனைவரின் உணர்வுகளையும் புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் மாறுபட்ட ஒரு உர்ஃபியை மாறுபட்ட உடையில் பார்ப்பீர்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் மூலம் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவருடைய இந்த திடீர் மன மாற்றத்திற்கு என்ன காரணம் என யோசித்து வருகிறார்கள்.
கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள் :
இதை பார்த்த ரசிகர்கள் இது உண்மைதானா அல்லது நீங்கள் இனிமேல் கூடவோ அல்லது குறைவாகவோ உடையை அணிய உள்ளீர்களா? என கிண்டல் செய்து வருகிறார்கள். உர்ஃபியின் தீவிர ரசிகர் ஒருவர் "நீங்கள் விரும்பும் எதையும் அணியுங்கள் uorfi Stay Liberated" என ட்வீட் செய்து இருந்தார்.
உர்ஃபி ஜாவேத் தனது ஃபேஷன் பணியில் மிகவும் உண்மையாகவே இருந்து வந்துள்ளார். எந்த ஒரு பேஷன் ஷோ என்றாலும் அதில் அவரின் தேர்வு என்றுமே மற்றவர்களுக்கு சவால் விடும் வகையில் அமைத்துக்கொள்வதில் பெயர் பெற்றவர்.
குழந்தை பருவம் குறித்து உர்ஃபி:
முன்னர் ஒரு பத்திரிக்கைக்கு உர்ஃபி ஜாவேத் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது மோசமான குழந்தை பருவம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து இருந்தார். தனது தந்தை மிகவும் மோசமானவர். தனது அம்மாவையும், உடன்பிறந்தவர்களையும் உடல் ரீதியாகவும் உள வார்த்தையாகும் மிகவும் துன்புறுத்தியுள்ளார். அதனால் இரண்டு முறை நான் தற்கொலைக்கு முயன்றுள்ளேன் என கூறியுள்ளார் உர்ஃபி.
நான் என்றுமே பேஷன் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தேன். அதிகமாக பேஷன் சென்ஸ் அவ்வளவாக இல்லை என்றாலும் எது அணிய வேண்டும் என்பது எனக்கு தெரியும். நான் என்றுமே வித்தியாசமாகவும் , அழகாகவும் இருக்கவே விரும்புவேன். எந்த இடத்திற்கு சென்றாலும் அனைவரின் பார்வையும் என் மீது இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன் என அந்த பத்திரிகைக்கு பதில் அளித்து இருந்தார்.