Uma Riyaz Khan : என் மகனுக்கு அழகான தேவதை கிடைச்சுட்டா! பூரிப்பில் உமா ரியாஸ் பகிர்ந்த போஸ்ட்
Uma Riyaz Khan : ரியாஸ் கான் - உமா ரியாஸ் கான் மூத்த மகன் ஷாரிக்ஹாசன் தான் கஹாலிது வந்த மரியா ஜெனிஃபரை திருமணம் செய்து கொள்ள போகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷாரிக் ஹாசன். திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லனாக குணச்சித்திர நடிகராக அறியப்படும் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசன் திருமணம் குறித்த அறிவிப்பை சோசியல் மீடியா மூலம் தெரிவித்துள்ளார் நடிகை உமா ரியாஸ் கான்.
ஷாரிக் ஹாசன் பெற்றோர் இருவருமே வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான மற்றும் பிஸியான பர்சனாலிடியாக இருந்து வருகிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'இனியா' தொடரில் வில்லனாக நடித்து வருகிறார் ரியாஸ் கான். விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை நிரூபித்து இரண்டாம் இடத்தை தட்டி சென்றார். தற்போது யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் உமா ரியாஸ் கானை ஏராளமான சப்ஸ்க்ரைபர்கள் பாலோ செய்கிறார்கள்.
ஷாரிக் ஹாசனுக்கு பெரிய அளவுக்கு சினிமா வாய்ப்புகள் கைகொடுக்கவில்லை. டான், ஜகிரி தோஸ்து உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பெரிய அளவுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அமையாததால் தனக்கு கிடைத்த 'பிக் பாஸ்' வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பிரபலமானார். பல சர்ச்சைகளில் சிக்கிய ஷாரிக் பிக் பாஸ் வீட்டில் 49 நாட்கள் வரை தாக்குப் பிடித்து பின்னர் வெளியேறினார்.
நடனத்தில் மிகுந்த ஆர்வம் உடைய ஷாரிக், பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அனிதா சம்பத் உடன் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டம் வென்றனர்.
தற்போது நடிகர் ஷாரிக் ஹாசன் திருமணம் குறித்த ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. மரியா ஜெனிஃபர் எனும் பெண்ணை காதலித்து வந்த ஷாரிக் நடிகை சோசியல் மீடியாவில் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி திருமணத்தை நடித்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. உமா ரியாஸ்கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இருக்கும் மருமகளின் புகைப்படத்தை பகிர்ந்து "ஒரு வழியாக என்னுடைய மகன் ஷாரிக் அழகான தேவதையை திருமணம் செய்து கொள்ள போகிறான். பிளஸ் யூ" என போஸ்ட் பகிர்ந்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
தற்போது லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரிசார்ட்' என்ற திரில்லர் படத்தில் ஷாரிக் ஹாசன் மற்றும் ராஜ் ஐயப்பா லீட் ரோலில் நடிக்க பிக் பாஸ் புகழ் அனன்யா ராவ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 'அயலி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான காயத்ரி கிருஷ்ணன் மற்றும் அக்ஷய் கமல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.