மேலும் அறிய

Udhayanithi next project : உதயமாகும் உதயநிதியின் அடுத்த படம்.. புது அப்டேட்டை வெளியிட்ட ரெட் ஜெயின்ட் மூவிஸ்..!

நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் மூலம் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இந்தியில் ஹிட்டான ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடந்து, இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

இந்தபடத்தின் டீசர் கடந்த மாதம் 11 ம் தேதி வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின் “நடுவுல நிக்கிறது இல்ல சார் நியூட்ரல்.. நியாயத்து பக்கம் நிக்குறதுதான் நியூட்ரல்” என பேசும் டையலாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இந்தநிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் மூலம் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாரா..? அல்லது வேறு யாரேனும் நடிகரை வைத்து தயாரிக்கிறாரா..? என்பது தெரியவில்லை. 

இருப்பினும் இதுகுறித்து தனது இன்ஸ்டா போஸ்டில் போஸ்ட் செய்த உதயநிதி ஸ்டாலின், வருகின்ற 4 ம் தேதி(நாளை) காலை 10 மணிக்கு இந்த புதிய படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் வெளியிட்ட அந்த போஸ்டரில், செஸ் விளையாட்டில் வரும் ராஜா காய் மீது ஒரு காக்கை அமர்ந்து இருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. அனைத்தும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. 

தற்போது கிடைத்த தகவலின்படி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விக்ரம் படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் பகத் பாசில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்றுமுன்தினம், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளில் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற பகத் பாசில் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படம் இணையத்தில் படு வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Embed widget