TN Urban Local Body Election 2022 Voting: ஆப்சென்டான ரஜினி, தனுஷ்! ஊரில் இல்லாத அஜித்! ஓட்டுப்போடாத பிரபலங்கள்!
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வராத சினிமா பிரபலங்கள் பற்றி இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார். அதே சமயம் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சினிமா பிரபலங்கள் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. அப்படி வாக்குப்பதிவுக்கு வராத சினிமா பிரபலங்களை பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
வாக்குப்பதிவு ஆரம்பமான சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 192 வது வார்டு வாக்குசாவடிக்கு சிவப்பு நிற ஆல்டோ காரில் வந்து வாக்களித்தார்.
View this post on Instagram
அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்ப்பரிப்பில் ரசிகர்கள் குவிய அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் அவர் கை கூப்பி மன்னிப்பு கேட்டார். நடிகர் கமல்ஹாசனும் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
View this post on Instagram
அதே போல, நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் தி நகர் வாக்குச் சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர். இவர்களின் வரிசையில் நடிகைகள் குஷ்பூ, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் அருண் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
View this post on Instagram
இந்தத் தேர்தலில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை. அதே போல தொடர்ந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றி வந்த நடிகர் அஜித்தும் வாக்களிக்க வரவில்லை. அஜித் ஊரில் இல்லை என்றும் வெளியூரில் இருப்பதால் ஓட்டுப்போட வரவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
இவர்களின் வரிசையில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும், நடிகர்கள் தனுஷ்,விஜய்சேதுபதி, வடிவேலு, சிவகார்த்திகேயன், ஜீ வி பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாக்களிக்க வரவில்லை.
சிலம்பரசன் வாக்களிக்க வராதது குறித்து பேசிய அவரது தந்தை டி.ராஜேந்தர், “ நாட்டில் இருக்கும் சூழலில் ஓட்டுப் போடலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓட்டு போடாமல் வாழலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
ஆனால் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். நடிகர் சிம்பு மும்பையில் விளம்பர படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அவரை வாக்களிக்க வரவழைக்க முயற்சி செய்தும் வர முடியாமல் போனது. கொரோனா சூழ்நிலையால் நடிகர் அஜித் வாக்களிக்க வரவில்லை. இல்லையென்றால் இத்தனை தேர்தலுக்கு வாக்களிக்க வந்தவர் இப்போது வராமல் இருப்பாரா.. நாட்டுல சூழ்நிலை சரியில்ல சார்” என்றார்.