Titanic 25th Anniversary : ரோஸுக்கு இரண்டு ஹேர் ஸ்டைலா... டைட்டானிக் போஸ்டரில் இருந்த குளறுபடி ... சுட்டிக்காட்டிய டைஹார்ட் ரசிகர்கள்
25வது ஆண்டுவிழாவை ஒட்டி புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் டைட்டானிக் படத்தின் போஸ்டரில் ரோஸ் டிவிட் ஹேர்ஸ்டைலில் இருந்த பெரிய பிழையை சுட்டிக்காட்டிய ரசிகர்கள்.
ஹாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்ற ஒரு ரொமான்டிக் காதல் திரைப்படமான 'டைட்டானிக்' 25வது ஆண்டு விழாவையொட்டி மீண்டும் திரையரங்குகளில் புது பொலிவுடன் வெளியாக உள்ளது. அதன் ரிலீசுக்கு முன்னர் மயங்க வைக்கும் டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது.
மாபெரும் சாதனை செய்த டைட்டானிக் :
1997ம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது. 1998ம் ஆண்டு 14 பிரிவுகளின் கீழ் அகாடமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டதில் 11 பிரிவுகளில் விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இப்படத்தில் காட்சிகள் அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் நிகழ்வது போலவே இருந்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What happened to rose about her hair in the poster?🤨 #Titanic https://t.co/ZePW68tbUY
— Rainy season ⛈️🌈🌦️ (@Rainyse62766726) January 11, 2023
ஹேர் ஸ்டைலில் நடந்த குளறுபடி :
லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்திருந்த டைட்டானிக் திரைப்படத்தின் புதிய போஸ்டரில் ஸ்டார் காதலர்களான ஜாக் டாசன் (லியோனார்டோ டிகாப்ரியோ) மற்றும் ரோஸ் டிவிட் புகேட்டர் (கேட் வின்ஸ்லெட்) இடம் பெற்று இருந்தனர். வெளியான இந்த போஸ்டரில் புறக்கணிக்க முடியாத ஒரு தவறை சுட்டிக்காட்டி சோசியல் மீடியாவில் பதிவிட்டனர் ரொமான்டிக் காதலர்களின் டைஹார்ட் ரசிகர்கள். ரோஸ் டிவிட் புகேட்டரின் ஹேர்ஸ்டைல் இரண்டு விதமாக காட்டப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு நெருடலாக இருக்கவே அவர்கள் அதை சுட்டி காட்டியுள்ளனர்.
Celebrate the 25th anniversary of the timeless love story this Valentine’s Day Weekend.
— Paramount Pictures (@ParamountPics) January 10, 2023
#Titanic returns to the big screen in remastered 4K 3D on February 10. pic.twitter.com/WcBFJJ8hBI
வெளியான புதிய டிரைலர் :
25வது ஆண்டு விழாவையொட்டி ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் திரைப்படத்தின் 'ரீ மாஸ்டர்டு' பதிப்பு ' 3D 4K HDR' தொழில்நுட்பத்தில் 2023-ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வார இறுதி நாளான பிப்ரவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. உயர்-பிரேம்-ரேட்டுடன் வெளியிடப்படும் இப்படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் திரையிடப்படும். இந்த அறிவிப்பினை புதிய டிரைலருடன் பாரமவுண்ட் நிறுவனம் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டுள்ளனர்.