மேலும் அறிய
Advertisement
'பொன்னியின் செல்வன்' கேரக்டராகவே மாறி படம் பார்க்க வந்த சுட்டிகள்.. செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்
திருவாரூரில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் போன்று வேடமணிந்து படம் பார்க்க வந்த மாணவ மாணவிகள்.. செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்
உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரையிடப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் படம் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
இந்த நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தைலமை திரையரங்கில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 3 திரைகளிலும் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்காக தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போன்று வேடமணிந்து இந்த படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வந்திருந்தனர். அப்போது படத்தை காண வந்திருந்த பொதுமக்கள் அவர்களுடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
திருவாரூர் புலிவலம் பகுதியைச் சேர்ந்த நாடக நடிகரான ஜெயபால் பெரிய பெரியபழுவேட்டறையர் வேடமணிந்துடன் மாணவ, மாணவிகளை வந்தியத்தேவன், ஆதித்திய கரிகாலன், சுந்தர சோழன், மதுராந்தகன் ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, குந்தவை, நந்தினி, வானதி ஆகியோரின் வேடம் அணிய வைத்து இந்த படத்திற்கு அழைத்து வந்திருந்தார். இவர்களுக்கான ஒப்பனையை ஒப்பனையாளர் கலியமூர்த்தி என்பவர் செய்திருந்தார்.
இதுகுறித்து நாடக நடிகர் ஜெயபால் கூறுகையில், “சோழர்களின் வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக இந்த பொன்னியின் செல்வன் படம் இருக்கிறது. இது தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்து மாணவ, மாணவிகள் சோழர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் நாடக நடிகரான நான் மட்டுமல்லாமல் மாணவ, மாணவிகளையும் அந்த கதாபாத்திரங்களாக மாற்றி இந்த படத்திற்கு அழைத்து வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion