This week OTT release : மாஸாக வெளியான கல்கி 2898 AD! ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன?
This week OTT release : ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ
வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் கல்கி 2898 AD. அறிவியல் புனைகதை மற்றும் புராணங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள உள்ள இப்படம் வரும் ஜூன் 27-ஆம் தேதியான இன்று உலகெங்கும் வெளியானது. அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன், கமல்ஹாசன், ஷோபனா, அனா பென், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது.
இதுவரையில் எந்த ஒரு படத்துக்கும் இல்லாத அளவுக்கு கல்கி 2898 AD படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அமோகமாக நடைபெற்று சாதனை படைத்தது. இப்படம் ஒரு பக்கம் ரசிர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பல படங்கள் ஓடிடி தளங்களிலும் வெளியாக உள்ளது.
கடந்த மே மாதம் பிரித்விராஜ் சுகுமாரன், நிகிலா விமல், அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான மலையாள படமான 'குருவாயூர் ஆம்பள நடையில்' என்ற முழுநீள நகைச்சவை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று (ஜூன் 27) முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
வரும் ஜூலை 12ம் தேதி பல ஆண்டுகளாக மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குநர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'இந்தியன் 2 ' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் முதல் பாகமான 'இந்தியன்' படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இணைய தொடரான 'உப்பு புளி காரம்' சீரிஸின் புது எபிசோட் நேற்று (ஜூன் 26) வெளியான நிலையில் அதே போண்டா மற்றுமொரு இணைய தொடரான 'ஹார்ட் பீட்' சீரிஸ் இன்று (ஜூன் 27 ) முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.
கொரியன் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் 'ஐ சா த டெவில்' என்ற கொரியன் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஜூன் 28ம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அமீர் நடிப்பில் வெளியான 'உயிர் தமிழுக்கு' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.