![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Video: “ரொம்ப கஷ்டம்லாம் இல்ல...நடிக்கிறது ரொம்ப ஈசி” ..லெஜண்ட் சரவணனின் வைரல் வீடியோ
நடிகர் லெஜண்ட் சரவணனின் நடிப்பு குறித்து சிலர் கிண்டலாகவும், சிலர் அவரின் துணிச்சலான முயற்சியை பாராட்டியும் உள்ளனர்.
![Video: “ரொம்ப கஷ்டம்லாம் இல்ல...நடிக்கிறது ரொம்ப ஈசி” ..லெஜண்ட் சரவணனின் வைரல் வீடியோ The Legend Actor Saravanan Arul Says Acting is Very Very Easy After his Debut Movie- Watch Video Video: “ரொம்ப கஷ்டம்லாம் இல்ல...நடிக்கிறது ரொம்ப ஈசி” ..லெஜண்ட் சரவணனின் வைரல் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/6909d391657e0ba0aefab011df0b6aed1659256546_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிப்பு என்பது ரொம்ப ஈசியான விஷயம் என நடிகர் லெஜண்ட் சரவணன் தெரிவித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்து அடுத்து பிற ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் முதலாளிகளையும் விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர் “லெஜண்ட் சரவணன்”. இதனைத் தொடர்ந்து இவரின் சினிமா எண்ட்ரி குறித்த அறிவிப்பு வெளியானது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்கி வந்த இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசை, விவேக், பிரபு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
Its a Family Hit! Check out what people have to say about #TheLegend! #TheLegendRunningSuccessfully at Theatres near you. @DirJdjerry @Jharrisjayaraj @_TheLegendMovie pic.twitter.com/2PJlpO2zYs
— Legend Saravanan (@yoursthelegend) July 30, 2022
மேலும் தி லெஜண்ட் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ஹீரோயின்களாக ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி இருவரும் நடிக்க லட்சுமி ராய், யாஷிகா ஆனந்த் ஆகியோர் ஒருபாடலுக்கு நடனமாடினர். தி லெஜண்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா மே 29 ஆம் தேதி தமிழ் சினிமாவின் 10 ஹீரோயின்கள் பங்கேற்க மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களும் வெளியாகி ஹிட்டான நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.
Acting is easy #TheLegend🔥🔥
— Karthik Ravivarma (@Karthikravivarm) July 30, 2022
🙂pic.twitter.com/MRiFdgJtvW
இதற்கிடையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி படம் வெளியானது. சுமார் 5 மொழிகளில் 2500 தியேட்டர்களில் படம் வெளியானதால் ரசிகர்கள் சரவணன் அப்படி என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில் பலரும் இதுகுறித்த கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக நடிகர் லெஜண்ட் சரவணனின் நடிப்பு குறித்து சிலர் கிண்டலாகவும், சிலர் அவரின் துணிச்சலான முயற்சியை பாராட்டியும் உள்ளனர். இந்நிலையில் லெஜண்ட் சரவணன் தெரிவித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் கார் ஓட்ட பழகுபவர்கள் 2,3 நாட்கள் கஷ்டப்படுவோம், தடுமாறுவோம்.அதன்பின் ஈசியா ஓட்ட பழகிருவோம். அதன்பின் ஒவ்வொருத்தரும் திறமைக்கு தகுந்த மாதிரி ஓட்டுவாங்க..அந்த மாதிரி தான் நடிக்கிறது ரொம்ப ஈசி..அது கஷ்டம்லா இல்ல என தெரிவிக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)