மேலும் அறிய

Thalapathy Vijay: தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் குடும்பம்.. கருணாநிதி குடும்பத்தை புகழ்ந்த விஜய்!

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய்  “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். அவரின் வருகை பெரும் அதிர்வலைகளை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்தை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் புகழ்ந்து பேசும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடைசியாக “லியோ” படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து அவர், வெங்கட் பிரபு இயக்கத்தில்  “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா என முக்கிய பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய்  “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். அவரின் அரசியல் வருகை பெரும் அதிர்வலைகளை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் பட ஷூட்டிங், மறுபக்கம் கட்சிப்பணிகள் என இரண்டையும் ஒருங்கே விஜய் கவனித்து வருகிறார். 

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்பதை அவர் தெளிவாக சொல்லி விட்டார். மேலும் இன்னும் ஒரு படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவரின் 69வது படத்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் முடிவு எடுத்துள்ளார். விஜய்யின் கடைசிப்படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. 

இதனிடையே தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது தொடங்கி வழக்கமான கட்சிகளின் செயல்பாடுகளிலும் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கி விட்டது. இந்நிலையில் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் விஜய், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

விஜய் - ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன? அரசியலா? உதயநிதி ஸ்டாலின்  கொடுத்த விளக்கம்! | Udhayanidhi Stalin's clarification about M K Stalin's  meeting with Vijay - Tamil Oneindia

உதயநிதி, தயாநிதி, அருள்நிதி, தமிழரசு, கனிமொழி  என இவர்களின் பெயர்களை கேட்கும்போதெல்லாம் என் படத்துக்கு டைட்டிலாக வைக்கலாம் என தோன்றும். அந்த அளவுக்கு ரொம்ப ஃபவர்புல்லான மற்றும் அழகான பெயர்கள் இவை. இந்தியாவில் பரம்பரை பரம்பரையாக பெயர் சொல்லக்கூடிய குடும்பம் என்றால் அது ஜவஹர்லால் நேருவினுடையது தான். அதேபோல் தமிழ்நாட்டில் பெயர் சொல்லக்கூடிய குடும்பம் நம்ம கலைஞர் அய்யாவுடையது” என அந்நிகழ்ச்சியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பேசியிருப்பார். 

மேலும் படிக்க: Mysskin: கேள்வி கேட்டவர்களை அவமானப்படுத்தினாரா மிஷ்கின்? - சர்ச்சையை கிளப்பிய பேச்சு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
TN Rain: உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
Embed widget