Thalapathy 67: விஜயின் 67 ஆவது படத்தை இயக்கப்போவது யார்? .. வெளியானது தகவல்.. ட்ரெண்டிங்கில் பிரபல இயக்குநர்.!
நடிகர் விஜயின் அடுத்தப்படத்தை யார் இயக்க விருக்கிறார் என்பது குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகிற்கு மாநகரம் என்ற எதார்த்த திரைக்களத்துடன் கால் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘கைதி’ என்ற படத்தில் நடித்தார். முழுக்க, முழுக்க இரவில் நடக்கும் காட்சிகளை கொண்டு லோகேஷ் அமைத்திருந்த திரைக்கதை ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா வட்டாரத்திலும் பாராட்டுகளை பெற்றது.
இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கமிட் ஆனார். இந்தப்படம் ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட்டாக அமைந்தது. குறிப்பாக விஜய்க்கே உரித்தான மாஸ் காட்சிகளை லோகேஷ் கையாண்டிருந்த விதம் விமர்சர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் கமலின் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
After #Vikram @Dir_Lokesh ‘s next is with #Thalapathy @actorvijay ! #Master Combo is Again 🔥#Thalapathy67 #Beast @actorvijay pic.twitter.com/5vnX5BfwS5
— Thalapathy Gaffor (@lonelywolfgaf) March 5, 2022
இந்தப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இந்தப்படத்தில் இந்திய சினிமாவின் நடிப்பு சாணக்கியர்களாக பார்க்கப்படும் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது.
View this post on Instagram
இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது தளபதி 66 பற்றிய தகவல். ஆம், விஜயின் பீஸ்ட் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக வம்சி இயக்கும் விஜயின் 66 படத்திற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜயின் 67 ஆவது படத்தை மீண்டும் லோகேஷ் கனகாரஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.

இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் #Thalapathy67 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் இந்தப்படத்தில் விஜய்க்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.





















