Thalaivar 173: கழட்டி விட்ட சிவகார்த்திகேயன்.. கைகொடுத்த ரஜினி.. சிபிசக்ரவர்த்திக்கு அடித்த அதிர்ஷ்டம்!
சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக படம் இயக்கவில்லை. அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடம் ஒரு படம் இணையப் போவதாக கடந்தாண்டு செய்திகள் வெளியானது. இப்போது ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படியான நிலையில் சிவகார்த்திகேயனை இயக்குவதாக தகவல் வெளியான நிலையில் எப்படி இந்த காம்போ மாறிப் போனது என்பது பற்றி காணலாம்.
ரஜினியின் 173வது படம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடைசியாக 2025ம் ஆண்டு கூலி படத்தில் நடித்தார். அடுத்ததாக அவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் யாரும் எதிர்பாராத காம்போவாக ரஜினிகாந்த் நடிக்க கமல்ஹாசன் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகினார்.
இதனால் ரஜினியை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அதன்படி நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து என பலரின் பெயர்களும் அடிபட்டது. இதனால் எதிர்பார்ப்பு எகிறியது. எனினும் கடைசியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிபி சக்கரவர்த்தி பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Every HERO has a FAMILY#Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027 @rajinikanth @ikamalhaasan @Dir_Cibi @anirudhofficial #Mahendran @APIfilms @homescreenent@RKFI @turmericmediaTM @magizhmandram
— Turmeric Media (@turmericmediaTM) January 3, 2026
Promo music : in-house pic.twitter.com/8s954ZIHUM
சிவகார்த்திகேயனுடன் ஒரு படம்?
சிபி சக்கரவர்த்தி இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அவர் விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களில் பணியாற்றிய நிலையில் 2022ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் டான் படம் மூலம் இயக்குநரானார். அப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று கவனிக்கத்தக்க நடிகராக மாறினார். டான் படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது.
எனினும் சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக படம் இயக்கவில்லை. அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடம் ஒரு படம் இணையப் போவதாக கடந்தாண்டு செய்திகள் வெளியானது. ஆனால் சிவகார்த்திகேயனோ அப்போது மதராஸி, பராசக்தி என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தெலுங்கு நடிகர் நானியிடம் கதை ஒன்றை சொல்ல அவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவரும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். இதனால் சிபி சக்கரவர்த்தி படம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இப்படியான நிலையில் டான் படம் வெளியான சமயத்தில் அதனைப் பார்த்த ரஜினிகாந்த் சிபி சக்கரவர்த்தியை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது அவரிடம் கதை இருந்தால் சொல்லுமாறு கூட, ஒன்லைன் மட்டும் சிபி தெரிவித்திருந்ததாக சொல்லப்பட்டது.
அதனை திரைக்கதையாக மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு சிபி சக்கரவர்த்திக்கு கிடைத்துள்ளது. என்றாவது ஒருநாள் நான் அவரை வைத்து படம் இயக்குவேன் என அவர் சொன்னது இன்று பலித்துள்ளது. இப்போதைக்கு இசையமைப்பாளராக அனிருத் பெயர் டிக் அடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விபரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















