படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்துவேன் - பிரபல நடிகை ராஷிகண்ணா
பிரபல நடிகை ராஷிகண்ணா படுக்கையறை காட்சிகளில் நடித்தும் ரசிகர்களை குஷிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகை ராஷிகண்ணா படுக்கையறை காட்சிகளில் நடித்தும் ரசிகர்களை குஷிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ராஷிகண்ணா. தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகளை போன்றுதான் முத்தக்காட்சிகளும். நடிக்க வந்த பிறகு முத்தக்காட்சி என்ன? படுக்கையறை காட்சி என்ன? அனைத்து காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்குவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் இளம் வயதிலே காதல் தோல்வியை சந்தித்துவிட்டேன். இதனால், நான் துவண்டுவிடவில்லை. காதலை வெறுக்கவும் இல்லை. மீண்டும் காதலிப்பேன். நிச்சயம் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். பிரபல நடிகையான ராஷி கண்ணா படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்துவேன் என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மெட்ராஸ் கபே என்ற இந்திப்படம் மூலமாக ராஷிகண்ணா நடிகையாக அறிமுகமானார். பின்னர், தெலுங்கு படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிட்டியது. இதன்மூலம் தெலுங்கில் பெரிய நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலமாக அறிமுகமானார். பின்னர், தமிழில் அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து தமிழிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் சர்தார் ஆகிய படங்களில் மட்டுமின்றி மேதாவி, சைதான்கா பச்சா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராஷிகண்ணாவிற்கு என்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்