குழந்தையை கடித்த பாம்பு! கலசத்திற்காக சண்டையிடும் கார்த்தி - கார்த்திகை தீபத்தில் இன்று
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
கலசத்தை கண்டுபிடிக்கத் தீவிரம்:
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி கலசத்தை கண்டுபிடிக்க தண்ணி கேன் போடும் கம்பெனிக்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் அந்த வண்டி குறித்து விசாரிக்க என் ப்ரண்ட் எடுத்துட்டு போய் இருந்தான் என்று சொல்ல அந்த நபருக்கும் ரவுடிகளுக்கு சம்மந்தம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான். இதைத்தொடர்ந்து அந்த ரவுடிகளை தேடி வருகிறான்.
கலசத்தால் பிரச்சினை:
மறுபக்கம் சேட்டு வீட்டிற்குள் புகுந்த நாகம் ஒன்று, குழந்தையை சீண்டி விட சேட்டுவின் மனைவி குழந்தையை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். இங்கே கார்த்திக் ரவுடிகளை கண்டுபிடித்து அவர்களை அடித்து விசாரிக்க கலசத்தை விற்று விட்டதாக சொல்கிறார்கள்.
இதையடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி இந்த பக்கமாக வர குழந்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர், சேட்டுவின் மனைவி போன் போட்டு அந்த கலசத்தால் தான் எல்லா பிரச்னையும் என பேச கார்த்திக் கலசம் என்ற வார்த்தையை கேட்டு விட்டு அந்த பெண்ணை விசாரிக்கிறான்.
விற்கப்பட்ட கலசம்:
சேட்டுவின் மனைவி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அந்த கலசத்தை தேடி தான் நாங்க வந்தோம் என கார்த்திக் சொல்ல, அந்த பெண்மணி சேட்டுவை சந்தித்து கலசத்தை வாங்கிக்கோங்க என்று சொல்கிறாள்.
ஆனால் சேட்டு ஒரு குடோனில் வெளிநாட்டு நபர்களை சந்தித்து கலசத்தை கொடுத்து பணத்தை வாங்கி கொண்டு கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.