Parijatham: சிந்தாமணி மண்டையை உடைத்த விஷால்.. பாரிஜாதத்தில் பரபரப்பு
பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாலி பிரித்து போடும் நிகழ்ச்சியில், விஷால் கலந்து கொண்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சிந்தாமணி தலையை உடைத்த விஷால்:
அதாவது, இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் விஷால் ரூமுக்கு வந்து உனக்காக ஒன்னும் வரல, என் அம்மாவுக்காக தான் வந்தேன் என்று சொல்ல அம்மாவோட போன்ல இருந்து மெசேஜ் பண்ணது நான் தான் என்ற உண்மையை இசை உடைக்கிறாள்.
இதனால் கோபமாகும் விஷால் பொருட்களை தூக்கிப்போட்டு உடைக்கிறான். சத்தம் கேட்டு கதவை திறந்து பார்க்கும் சிந்தாமணி தலையில் பொருள் வந்து விழ அவள் காயத்துடன் அங்கிருந்து கீழே செல்கிறார். ஸ்ரீஜா என்ன ஆச்சு என்று கேட்க சிந்தாமணி நடந்ததை சொல்கிறாள்.
ஸ்ரீஜா வீட்டில் இருந்து வந்த சீர்:
அதன்பிறகு, அடுத்த நாள் காலையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு எல்லோரும் தயாராக ஸ்ரீஜா வீட்டிலிருந்து சீர்வரிசை வந்து இறங்குகிறது. இதனால் சிந்தாமணி ஆகியோர் இசையை ஏளனமாக பேச வர்ஷினி தனது அக்காவுக்காக சீர்வரிசை கொண்டு வந்து கொடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















