Parijatham: ஸ்ரீஜாவிற்கு சவால் விட்ட இசை.. விஷாலுக்கு யாருடன் திருமணம் - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் இசையை வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஸ்ரீஜாவிடம் சவால் விடும் இசை:
அதாவது, சுப்ரதா தேவி இசை இந்த வீட்டு பொண்ணு அவ எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டா என்று சொல்லி இசையை தேடி கிளம்பி செல்கிறார். அதன் பிறகு இசையுடன் சுப்ரதா வீட்டுக்கு வர, இசை ஸ்ரீஜாவிடம் உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே துரத்துவேன் என்று சவால் விடுகிறாள். அதன் பிறகு கல்யாண பத்திரிக்கை அடிக்க வேண்டும் என சிந்தாமணி சொல்கிறாள்.
ஸ்ரீஜா பெயர்:
ராகவ் கல்யாண பத்திரிக்கையில் ஸ்ரீஜாவின் பெயருக்கு பதிலாக இசையின் பெயரை அச்சிட சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.






















