Mari Serial: டாடா காட்டிய பழைய ஜோடி! புது ஜோடியுடன் களமிறங்கும் மாரி சீரியல் - யார் தெரியுமா?
ஜீ தமிழின் பிரபலமான சீரியலான மாரியில் நாயகன் நாயகிகளாக புது ஜோடிகள் களமிறங்க உள்ளன.

தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
வெளியேறிய ஹீரோ, ஹீரோயின்:
கதையின் நாயகியாக ஆஷிகா படுகோனே மற்றும் நாயகனாக ஆதர்ஷ் நடித்து வந்த நிலையில் தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறியுள்ளனர். சமீபத்தில் ஆஷிகா வெளியேற்றம் குறித்த தகவல் மட்டுமே வெளியான நிலையில் தற்போது ஆதர்ஷ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
புது ஜோடிகளுடன் மாரி:
இருவரும் இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது புது ஜோடிகளுடன் சீரியல் கதை ஒளிபரப்பாக உள்ளது. ஆமாம் மாரிக்கு பதிலாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் அஞ்சனா நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழின் என்றென்றும் புன்னகை என்ற சீரியலில் நடித்துள்ளார்.
ஹீரோ யார்?
மேலும் ஹீரோவாக பிரபல சேனலில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, வீட்டுக்கு வீடு வாசப்படி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த சுகேஷ் நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. சுகேஷ் சூர்யாவாக நடிக்கும் காட்சிகளை வெகுவிரைவில் எதிர்பார்க்கலாம்.

