Karthigai Deepam: சிலையைத் திருடியது சாமுண்டீஸ்வரியா? பில்லி சூனியம் வைத்தது யார்? கார்த்திகை தீபத்தில் பரபரப்பு
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிலை காணாமல் போக சிவனாண்டி, முத்துப்பாண்டி ஆட்கள் சாமுண்டீஸ்வரி மீது பழி போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரி பழி?
அதாவது, சிவனாண்டி முத்துப்பாண்டி ஆட்கள் சிலை காணாமல் போக சாமுண்டீஸ்வரி தான் காரணமாக இருக்கும் என்று சொல்ல ஊர்காரர்களும் அதை நம்ப தொடங்கி விடுகின்றனர். சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு எல்லாரும் கிளம்பி வருகின்றனர்.
சாமுண்டீஸ்வரி நான் தான் திருவிழாவிற்கு வரலனு சொல்லிட்டேன்ல, அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வரீங்க என்று கோவப்பட ஊர்க்காரர்கள் தயக்கத்துடன் நாங்க உங்களை கூப்பிட வரல, சிலை காணாமல் போயிடுச்சு, அதனால் உங்க வீட்டை சோதனை செய்யணும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ஷாக் ஆகிறாள்.
பில்ல சூனியம்:
மேலும் நீங்க என் புருஷனை அனுப்பனும்னு சொன்னீங்க, அனுப்பிட்டேன். சிலை காணாமல் போனதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, வீட்டை சோதனை செய்யணும்னா பண்ணிக்கோங்க என்று சொல்ல வீட்டில் சோதனை நடக்கிறது.
ஒரு பையில் இருந்து பில்லி சூனியம் சார்ந்த பொருட்கள் கிடைக்க இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கோவில் பூஜை சரியாக நடக்க கூடாது என்பதற்காகவே சாமுண்டீஸ்வரி இதையெல்லாம் செய்திருப்பதாக பழி போட்டு பஞ்சாயத்திற்கு அழைத்து வருகின்றனர்.
பஞ்சாயத்துக்கு வந்த சாமுண்டீஸ்வரி:
பஞ்சாயத்தில் சாமுண்டீஸ்வரி எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்று உறுதியாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















