Karthigai Deepam: "கல்யாணம் நடக்கும் ஆனா.." சாமுண்டீஸ்வரியை ஷாக்காக்கிய சாமியாடி - கார்த்திகை தீபத்தில் இன்று
karthigai deepam serial: கார்த்திகை தீ்பம் சீரியலில் சாமுண்டீஸ்வரியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சாமியாடி குறி ஒன்று கூறுகிறார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
சாமுண்டீஸ்வரியில் சிக்கிய மயில்வாகனம்:
இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் மகேஷ் குடிபோதையில் பேசியதை வீடியோவாக பதிவு செய்த மயில்வாகனம் அதை சாமுண்டீஸ்வரி இடம் கொடுத்து நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வீடியோவில் ஆடியோ இல்லாமல் இருக்க மயில்வாகனம் சாமுண்டீஸ்வரியிடம் சிக்கி கொள்கிறார். சாமுண்டீஸ்வரி எதுக்கு இப்படி எல்லாம் செய்றீங்க? என மயில்வாகனத்தை திட்டுகிறாள்.
மகேஷை சிக்க வைக்க மயில்வாகனம் திட்டம்:
அதனைத் தொடர்ந்து மயில்வாகனம் தன்னை சிக்க வைத்த மகேஸ்வரி ஏதாவது செய்ய வேண்டுமென யோசிக்கிறான். இந்த சமயத்தில் துர்கா காரில் இருந்து ஒரு பொருளை எடுக்கச் செல்ல ரவுடி ஒருவன் அவளிடம் பிரச்சனை செய்கிறான். மயில்வாகனம் தடுக்க போக, ரவுடி அவனை அடிக்க போக மகேஷை சிக்க வைக்க திட்டமிடுகிறான்.
மகேஷை துரத்திவிடும் சாமியாடி:
அதாவது "என் குடும்பத்துல என்னை விட பெரிய ஆள் ஒருத்தர் இருக்காரு.. அவர் மேல கைய வை" என்று சொல்லி மகேஷை போட்டு விடுகிறான். அடுத்த நாள் காலையில் சாமியாடியிடம் குறி கேட்க, எல்லோரும் தயாராக இருக்கின்றனர். மகேஷை பார்த்த சாமியாடி "உனக்கெல்லாம் குறி சொல்ல முடியாது" என துரத்தி விடுகிறார்.
ஷாக்கில் சாமுண்டீஸ்வரி:
அடுத்ததாக சாமுண்டீஸ்வரியை பார்த்த அவர், உன் பொண்ணு கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.. ஆனால் நீ நினைக்குறவனுடன் நடக்காது என குறி சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

