Karthigai Deepam: மூடாத இமைகள்.. ரேவதி உயிருக்கு ஆபத்து! கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சூழ்நிலை கார்த்திகை தீபம். இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு விபத்து ஏற்பட கார்த்திக் அவளை தேடி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதிக்கு ஆபரேஷன்:
அதாவது, கார்த்திக் ரேவதியை தேடி வர அப்போது அங்கு ஒரு பெண்ணுக்கான ஆக்சிடென்ட் நடந்ததாக பேசிக் கொண்டிருக்க கார்த்திக் யாருக்கு என்னாச்சு? என்று விசாரிக்கிறான். அப்போது ரேவதியின் போன் கிடைத்த பிறகு சந்தேகமடைந்து ரேவதியின் போட்டோவை காட்டி இந்த பொண்ணுக்கு ஆக்சிடென்ட் நடந்துச்சு என்று கேட்க ஆமாம் என சொல்கின்றனர்.
பிறகு எந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்காங்க என்று விசாரித்து, கார்த்தியும் மயில் வாகனமும் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர். ஹாஸ்பிடலில் ரேவதிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்க ஆப்ரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
மூடாத இமைகள்:
ஆனால் ரேவதியின் இமைகள் மூடாமல் இருக்க ஆபரேஷன் செய்வதில் சிக்கல் உருவாகிறது. இந்த விஷயம் அறிந்த அனைவரும் ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகின்றனர். என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















