Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியின் புடவையில் பிடித்த தீ.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட் - சூடுபிடித்த கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியின் புடவையில் தீப்பிடித்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டியை அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரியின் புடவையில் பற்றிய தீ:
அதாவது, அடுத்த நாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சாமுண்டீஸ்வரியும் குடும்பத்துடன் வருகிறாள். சாமுண்டீஸ்வரி சாமி குடும்பிடும் சமயத்தில் சாமுண்டீஸ்வரியின் புடவையில் ராஜராஜன் தீப்பிடிக்க வைக்கிறான். இதனால், பரபரப்பு ஏற்படுகிறது.
பிறகு முளைப்பாரி தூக்க மறுத்ததால் இப்படி நடந்து இருக்கலாம் என்று சாமியார் சொல்ல சாமுண்டீஸ்வரி மகள்கள் முளைப்பாரி எடுக்க சம்மதம் சொல்கிறாள். மேலும் ரோஹிணியை தனியாக அழைத்து உன் புருஷன் நல்லவன் என்று பில்டப் செய்து பேச வைக்கின்றனர். இதையடுத்து இவர்கள் கோவிலுக்கு கிளம்ப சாமுண்டீஸ்வரி நீங்க முன்னாடி போங்க நான் வரேன் என்று சொல்கிறாள்.
உண்மை வெளிவருமா?
அடுத்து ராஜராஜன் பரம்பரை வீட்டிற்கு போகலாம் என்று சொல்கிறார். சிவனாண்டியும் சந்திரகலாவும் அபிராமியை கோவிலுக்கு வர வைத்தால், கார்த்தியின் அம்மா என்று சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வந்து விடும் என திட்டமிடுகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















