Karthigai Deepam: பரமேஸ்வரிக்கு சதக்.. சதக்.. கொலைகாரியாக மாறிய சதிகாரி காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Karthigai Deepam serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய ஞாயிறு சிறப்பு எபிசோடில் ராஜராஜனை ரவுடிகள் கொல்ல முயற்சி செய்ய கார்த்திக் காவலனாக களமிறக்கி ராஜராஜனை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பரமேஸ்வரிக்கு கத்திக்குத்து:
அதாவது கார்த்தியால் தங்களது திட்டம் தோல்வியில் முடிந்ததை நினைத்து காளியம்மா கோபமடைந்து கோவிலுக்குள் இருக்கும் பரமேஸ்வரி பாட்டியை தனியாக வரவைத்து கத்தியால் குத்துகிறாள்.
இந்த கோவில் கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதால் கார்த்திக்கு இந்த விஷயத்தை போலீசுக்கு தெரியப்படுத்த மாட்டான் என திட்டமிடுகின்றனர். அதேபோல் கார்த்தி கோவிலுக்கு வர பாட்டி கத்திகுத்து வாங்கி இருக்க ஹாஸ்பிடலுக்கு அழைக்கிறான்.
கும்பாபிஷேகம்:
ஆனால் பரமேஸ்வரி பாட்டி இந்த கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கணும் என்று சொல்லி கோவிலுக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறாள். பாட்டிக்கு கத்திக்குத்து நடந்த விஷயம் அனைவரிடமும் மறைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கிறது.
நான்கு எல்லைகளிலும் விளக்கு போட்டு கோவிலுக்கு வந்த ராஜராஜன் குறி சொல்ல தொடங்க அனைவரும் அவரிடம் குறி கேட்டு சந்தோஷமடைகின்றனர். திருவிழா நல்லபடியாக நடக்க பாட்டியும் சந்தோஷம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















