Karthigai Deepam: காளியம்மாளை எரிக்கப் போன ஊர்மக்கள்.. கோபத்தில் கத்திய சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் உண்மை தெரிந்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் உண்மையை சொல்ல கும்பாபிஷேகம் நின்று போன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தீ வைக்கப் போன மக்கள்:
அதாவது பாம் வைத்து கும்பாபிஷேகத்தை நிறுத்த காரணம் காளியம்மா, சிவனாண்டி மற்றும் முத்துவேல் தான் என்று அறியும் ஊர் மக்கள் மிகுந்த கோபமடைகின்றனர்.
அதுமட்டுமின்றி அவர்களை பிடித்து இழுத்து வந்து மரத்தில் கட்டிப்போட்டு அடித்து கொளுத்த போக கார்த்திக் நிறுத்துங்க என்று தடுத்து நிறுத்துகிறான், நாமும் இதே மாதிரி நடந்துக்கிட்டா அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கு என்று கேள்வி கேட்கிறான்.
கோபத்தில் சாமுண்டீஸ்வரி:
இதையடுத்து பரமேஸ்வரி பாட்டி கோவிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் கௌசல்யா என்னாச்சு என்று கேட்க என் பேரனும் உண்மையை சொல்லிட்டான், கும்பாபிஷேகமும் நின்னு போச்சு என்று சொல்லி புலம்புகிறாள்.
தொடர்ந்து சாமுண்டீஸ்வரியோ, வீட்டில் எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்தி இருக்கீங்க என்று ஆவேசப்பட சந்திரகலா ஏற்றி விடுகிறாள். கார்த்திக் மயில் வாகனத்திற்கு போன் செய்து வீட்டிற்கு வருவதாக சொல்ல மயில் அத்தை கோபமாக இருக்காங்க இப்போ வேண்டாம் என்று சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















