மேலும் அறிய
Anna serial August 14 :மகன் கையால் மாட்டப்பட்ட விலங்கு.. கைதான சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Anna serial August 14 :ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான அண்ணா சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பதற்கு பார்க்கலாம்.

அண்ணா ஆகஸ்ட் 14 எபிசோட்
Source : social media
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி அவரது வாயால் சூடாமணி உத்தமி என்று சொல்ல ஷண்முகம் சனியன் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
என் பையன் சொன்ன மாதிரியே நான் உத்தமினு நிரூபிச்சிட்டான் என்று சௌந்தரபாண்டி கன்னத்தில் பளாரென அறைகிறான் உள்ளே வந்த சூடாமணி. இந்த விஷயம் தெரிந்தா என்ன? உன்னால் என்ன பண்ண முடியும் என்று நக்கலாக பேசுகிறார் சௌந்தரபாண்டி .
இந்த நேரத்தில் போலீஸ் உள்ளே என்ட்ரி கொடுக்கிறது. முதல் ஆளாக வந்து சௌந்தரபாண்டி நிற்க, போலீஸ் வந்தா என்னை கைது பண்ணிட முடியுமா? எங்க உன் உயர் அதிகாரி என்று கேட்க முத்துப்பாண்டி உள்ளே என்ட்ரி கொடுக்கிறான்.

சௌந்தரபாண்டி அவனை பார்த்ததும் என் புள்ள வந்துட்டான் டா, உங்களால என்ன பண்ண முடியும் என்று சந்தோசமாக பேச முத்துப்பாண்டி அவனது கையால் சௌந்திரபாண்டிக்கு விலங்கு மாட்ட சௌந்தரபாண்டி ஷாக் அடைகிறார். டேய் நான் உன் அப்பா டா, நீ இன்ஸ்பெக்டர் ஆக நான் தான் காரணம் என்று சொல்ல முத்துப்பாண்டி அதெல்லாம் தேவையில்லை என்று அப்பாவை கைது செய்து அழைத்து செல்கிறான்.
பாக்கியம், பரணி, ஷண்முகம் என ஆளாளுக்கு சௌந்தரபாண்டியை பார்த்து "நீங்க பண்ண பாவத்துக்கு தண்டனை கிடைத்து விட்டது" என்று சொல்ல அவர் "இது இத்தோட முடிய போறது இல்ல, இனிமே தான் ஆட்டமே இருக்கு என்று" சொல்லி விட்டு செல்கிறார்.
அப்பாவை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த முத்துப்பாண்டி ஜெயிலுக்குள் தள்ள சொல்ல சௌந்தரபாண்டி மீண்டும் "டேய் நான் உன் அப்பாடா" என்று பேச முயற்சி செய்ய முத்துப்பாண்டி மன வருத்தத்துடன் கடமையை செய்கிறான். சனியன் அய்யா போதையில் தெரியாமல் பண்ணிட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறான்.
சௌந்தரபாண்டி நீ என்னை வேற எதாவது விஷயத்தில் சந்தேகப்பட்டு இருந்தா கூட பரவாயில்ல, ஆனால் நான் உன் பொண்டாட்டிய தேடி வருவனா? நான் என் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டேன்ல என்று சனியனை அடி வெளுத்து எடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement