Amudhavum Annalakshmiyum: படிக்க அனுமதி கொடுக்காத உமா.. அமுதா எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய எபிசோட் இதோ..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும் ஒளிபரப்பாகி வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அமுதா படிக்க ஸ்கூல் போக உமா நீ இங்க படிக்க முடியாது என வெளியே துரத்திய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
செந்தில் உனக்கு இதெல்லாம் தேவையா அமுதாவை திட்ட அவள் வருத்தத்துடன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறாள். நேராக அமுதா நீதிபதியை பார்க்க வருகிறாள். அமுதா அவரிடம் படிக்க போனதையும் அங்கே அனுமதி தராத விஷயத்தையும் சொல்ல நீதிபதி அமுதாவிடம் சரி வா உனக்கு படிக்க ஏற்பாடு பண்றேன் என்று சொல்லி அமுதாவை காரில் அழைத்துக்கொண்டு செல்கிறார்.
அதன் பிறகு அமுதா, நீதிபதி என இருவரும் மினிஸ்டரை பார்க்க வருகின்றனர். மினிஸ்டர் நீதிபதியை பார்த்த உடன் பயத்தில் எழுந்து நிற்க அவர் மினிஸ்டரிடம் அமுதா படிக்க போகும் விஷயத்தை சொல்கிறார். மினிஸ்டர் இன்னும் 3 மாதத்துக்குள் அமுதா பத்தாவது பாஸ் பண்ண வேண்டும் என்று சொல்ல அமுதா சரி என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து மினிஸ்டர் ஆர்டர் கொடுக்க அமுதா சந்தோஷமடைகிறாள்.
பிறகு அமுதா வீட்டுக்கு வந்து 3 மாதத்துக்குள் 10வது பாஸ் பண்ண வேண்டும் என்று விஷயத்தை சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். மாணிக்கம் அமுதா படிப்பதற்கும் உதவியாக ஒரு black board எடுத்துக்கொண்டு வந்து அமுதாவை படிக்க சொல்கிறார். அனைவரும் அதை பார்த்து டென்ஷன் ஆகின்றனர். மேலும் அன்னம் அமுதாவிடம் உன்னால எப்படி படிக்க முடியும்? 10 வருஷம் படிக்க வேண்டிய படிப்ப உன்னால் எப்படி 3 மாசத்துல படிக்க முடியும் என்று சொல்லி திட்ட அமுதா சோகமாக இருக்க செந்தில் அவளிடம் அமுதா கொஞ்சம் ப்ராக்டிகலா யோசிச்சு பாரு உன்னால பாஸ் பண்ண முடியாது என்று சொல்ல அமுதா முடியும் என்று பதிலடி கொடுக்கிறாள்.
இதனால் செந்தில் டென்ஷனாகி நீ என்ன 10வது பாஸ் பண்ணறது ஈசினு நினைச்சியா என்று சொல்லி கணக்கு புக்கை எடுத்து அந்த பலகையில் ஒரு கணக்கு போட்டு அமுதாவுடம் உன்னால முடிஞ்சா இந்த கணக்கை போட்டு பதிலை வர வை என்று சொல்லும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.