Siragadikka Aasai: மனோஜை வேலை வாங்கும் முத்து: கடுப்பில் ரோகினி, விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
மனோஜ் விஜயாவிடம் "பெரிய ஆர்டர் மொத்தம் 500 மாலைன்னாஅதுவே 2, இரண்டரை லட்சம் வரும்" என சொல்கிறார். "எல்லாத்துக்கும் போய்ட்டு டீ போட்டு எடுத்துட்டு வா போ" என விஜயாவிடம் சொல்கிறார் அண்ணாமலை. "முத்து எட்டு டீ" என்கிறார் அண்ணாமலை. "இதுங்களுக்கு நான் டீ போட்டு கொடுக்கணுமா?" என சொல்லிக்கொண்டு விஜயா டீ போடுகிறார்.
சீதா உங்களுக்கு மாலைக்கட்ட தெரியுமா என விஜயாவிடம் கேட்கிறார். அதற்கு விஜயா ”விட்டா இவ என்னையே பூக்கட்ட சொல்லுவா” போல என சொல்லிவிட்டு செல்கிறார். ”நீ போய் உன் வேலையை பாரு” என விஜயாவிடம் சொல்கிறார் அண்ணாமலை. அப்போது முத்து வீட்டினுள் நுழைகிறார். ”சிரிப்பு சத்தம் ரோடு வரை கேட்குது வேலை ஜோரா நடக்குது போல” என சொல்கிறார் முத்து. முத்து ஸ்ருதியின் ஹோட்டலுக்கே லஞ்ச் கொண்டு சென்று கொடுத்து ஸ்ருதியை சர்ப்ரைஸ் செய்கிறார்.
”இதுக்கு முன்னாடி நீ இப்டி எடுத்துட்டு வந்தது இல்லையே” என்கிறார் ஸ்ருதி. ”உன் மேல என்ன கோவம் இருந்தாலும் நீ செஞ்சத சாப்ட்டா கோவம் போய்டுது” என்கிறார் ஸ்ருதி. பார்வதி அண்ணாமலையின் வீட்டுக்கு வருகிறார். மாலை ஆர்டர் குறித்த விஷயத்தை கேள்வி பட்டு ”பெரிய விஷயம் தாண்ணே” என்கிறார் பார்வதி. ஸ்ருதி ரவி வீட்டுக்கு வருகின்றனர். அப்போது ”நீங்க ஃப்ரஷ் அப் ஆயிட்டு வாங்க நான் காபி எடுத்துட்டு வரேன்” என விஜயா சொல்கிறார். பின் அவர்களுக்கு காபி போட்டுக் கொடுக்கிறார்.
”நீ வெளியே போகாதமா அங்க நெடியா இருக்கும்” என விஜயா ஸ்ருதியிடம் சொல்கிறார். ”எனக்கு மாலை கட்ட கத்துக்கணும்” என ஸ்ருதி சொல்கிறார். பின் மீனா ஸ்ருதிக்கு மாலைக் கட்ட கத்துக் கொடுக்கிறார். ஆனால் ஸ்ருதிக்கு மாலைக்கட்ட வரவில்லை. உடனே இப்போ ”மீனாவுக்கு டப்பிங் பேச வராது இல்ல அந்த மாதிரி தான் இதுவும்” என அண்ணாமலை சொல்கிறார். அதற்கு ஸ்ருதி அப்டியெல்லாம் இல்ல அங்கிள் ”நான் மீனாவை ஒரு நாள் டப்பிங் பேச வச்சேன்” என ஸ்ருதி சொல்கிறார். உடனே ரவியும் “ஆமாப்பா அண்ணி சூப்பரா பேசி இருந்தாங்க” என்கிறார்.
பார்வதி வீட்டுக்கு வருகிறார். அவரிடம் மீனாவின் மாலை ஆர்டர் குறித்து விஜயா கிண்டலடித்துப் பேசுகிறார். அனைவருக்கும் ரவி சமைப்பதாக சொல்லுகிறார். சமைக்கத் தேவையான பொருட்களை வாங்கி வர மனோஜை அனுப்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.