Siragadikka Aasai: சுற்றி வளைத்து கேள்வி கேட்கும் ரோகினி, விஜயா... மூக்குடைத்த மீனா.. சிறகடிக்க ஆசை இன்று!
Siragadikka Aasai Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்துப் பார்க்கலாம்.
இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) எபிசோடில், "இவனுக்கும் இவன் பொண்டாட்டிக்கும் நம்ம குடும்பத்து மேல அக்கறையே இல்லிங்க” என்கிறார் விஜயா. ”இந்த பொண்ண தேடி நானும் தானப்பா போனேன், அது உங்களுக்கு பெரிசா தெரியல” என்கிறார் முத்து.
அதற்கு அண்ணாமலை, ”உன் அவசர புத்தி தான் இதுக்கெல்லாம் காரணம்” என்கிறார். அண்ணாமலை, மனோஜிடம் ”இப்டிலாம் பொய் சொல்லிக்கிட்டு இருக்காத முதல்ல ஒரு வேலைய தேடிக்க” என்கிறார். ரோகினியிடம், ”இப்டியெல்லாம் சொல்லாம கொள்ளாம எங்கேயும் போகாதம்மா" என்கிறார். ரோகினி அதற்கு மன்னிப்பு கேட்கிறார்.
முத்து, ”இவன் விஷயத்துல பெரிசா என்னைக்காவது ஒரு நாள் ஏமாந்து நிக்க போறீங்க, உங்களையும் ஒரு நாள் ஏமாத்த தான் போறான்” என்று மனோஜ் குறித்து விஜயாவை பார்த்து கூறுகிறார். அண்ணாமலை, விஜயாவை பார்த்து ”நீ பொத்தி பொத்தி மறைக்குற விஷயம் பூகம்பமா வந்து வெடிக்குது” என்கிறார்.மனோஜ், ரோகினியின் மடி மீது படுத்து அழுகிறார்.
”நீ பீல் பண்னுவனுதான் வேலை போன விஷயத்தை உன்கிட்ட சொல்லாமலே இருந்தேன்” என்கிறார் மனோஜ். அதற்கு ரோகினி, ”நீ பொய் சொன்னத என்னால அக்சப்ட் பண்ணிக்கவே முடியல” என்கிறார். ஒரு வேலை இல்லனா இன்னொரு வேலை கிடச்சிடும் என்கிறார் ரோகினி. ”தப்பு தான் ரோகினி, வேலை கிடச்சதும் சொல்லிடலாம்னு நெனச்சேன்” என்கிறார் மனோஜ்
”லவ்வ விட ட்ரஸ்ட் தான் ரிலேஷஷிப்க்கு ரொம்ப முக்கியம்” என்கிறார் ரோகினி. ”நான் இந்த தப்ப சரி பண்ணிடுறேன்” என்கிறார் மனோஜ். ”இன்னொரு டைம் நம்பிக்கைய உடைக்குற மாதிரி ஏதாவது பண்ணா உன்னை விட்டு ஒரே அடியா” என சொல்ல வருகிறார். மனோஜ் உடனே ”அப்படியெல்லாம் சொல்லாத” என்று ரோகினியின் வாயை மூடுகின்றார். அப்போது விஜயா அங்கு வந்து விடுகிறார். ரோகினி அவரிடம், ”ஆண்டி உங்க மேலயும் எனக்கு வருத்தம் தான்” என ரோகினி கூறுகிறார். ”எனக்குனு வேற யாரு இருக்கா இந்த குடும்பம் மட்டும் தானே இருக்கு. இங்க ஒரு ஏமாற்றம் நடந்தா என்னால எப்டி தாங்கிக்க முடியும்” என்றும் சொல்லுகிறார்.
விஜயா ரோகினி-மனோஜிடம் ”நீங்க எப்பவும் இப்டி சந்தோஷமா” இருக்கனும் என கூறுகிறார். மனோஜ் இண்டர்வியூவுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார். ”வேலை கிடைக்குதுனு எதாவது சாதாரண ஒரு கம்பெனியில போய் சேர்ந்துடாதடா” என்கிறார் விஜயா.
சின்சியரா சவாரி எடுத்து காரை ஒட்டுனா மாசம் 30,000 வரை சம்பாதிக்கலாம் என முத்து மனோஜ் இடம் கூறுகிறார். ”நீங்க படிக்கல கார் ஓட்டுறீங்க, அவரு எத்தனை டிகிரி முடிச்சிருக்காரு.. அவரு ஏன் கார் ஓட்டனும்” என்கிறார் ரோகினி. உடனே மீனா, ”ஏன் இவரு படிக்கலனா என்ன, படிச்சவங்கள விட அவர் பல மடங்கு ஒசத்தி தான்” என்கிறார்.
மனோஜ், முத்து வீட்டில் இருந்து புறப்பட்டதும் “விஜயா, முத்து வேலைக்கு போய்ட்டானா” என மீனாவிடம் கேட்கிறார். “நீ சொல்லிக்கொடுத்து தானே அவன் இப்டியெல்லாம் பேசுறான்” எனக் கேட்கிறார். அப்போது ரோகினியும் மனோஜ் பேசியது குறித்து மீனாவிடம் கேள்வி கேட்கிறார். மனோஜ் இதற்கெல்லாம் விட்டுக்கொடுக்காமல் பேசி விட்டு ”எனக்கு கடையில வேலை இருக்கு நான் கிளம்புறேன்” என புறப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.