Pandian stores: என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? .. கேன்சர் நோயை கலாய்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ்... நெட்டிசன்கள் கோபம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனத்துக்கு கேன்சர் ஆபரேஷன் நடைபெற்றதாக ஒளிபரப்பாகும் காட்சிகள் இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian stores). குடும்ப பின்னணியில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருக்கும் பாசப்பிணைப்பை சுற்றிலும் நகரும் இந்த கதைக்களம் கொண்ட தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அந்த அபிமான ரசிகர்களுக்கு கூட சலிப்பு தட்டும் வகையில் சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.
தனத்துக்கு கேன்சர் :
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில வாரங்களாக தனத்துக்கு கேன்சர் என்றும் அதற்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த உண்மை மீனா மற்றும் முல்லையை தவிர வேறு யாருக்கும் தெரியாது. தனம் கர்ப்பமாக இருப்பதால் குழந்தை பிறந்த பிறகே கேன்சர் ட்ரீட்மென்ட் செய்ய முடியும் என டாக்டர் சொன்னதால் ஏதேதோ கோல்மால் செய்து வலி வந்த மாதிரி தனத்தை நடிக்க வைத்து ஒரு வழியாக சிசேரியன் செய்து பிரசவத்தை முடித்து விட்டார்கள்.
லாஜிக் இல்லாத ஆபரேஷன் :
ஆபரேஷன் செய்த மூணாவது நாளே தனம் வீட்டுக்கு வந்து வழக்கம் போல நைட்டியை போட்டு கொண்டு நடமாடுவாராம். உடனே கேன்சர் ஆபரேஷனையும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக நடத்தி விடுவார்களாம்.
என்ன தான் சீரியலாக இருந்தாலும் ஒரு அளவுக்காவது எதார்த்தம் இருக்க வேண்டாமா ? என இணைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முல்லைக்கு பிரசவமான போது மட்டும் ஒரு மாசம் அம்மணி ஆஸ்பத்திரியில் இருப்பது போல ஓட்டினார்கள் ஆனால் சீரியலில் தியாக சுடராக இருக்கும் தனம் மட்டும் குடும்பத்துக்கு செலவு வைக்க கூடாது என மூன்றே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்து விடுவாராம். என்னடா இது தில்லாலங்கடியாக இருக்கு என கலாய்த்து வருகிறார்கள்.
கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள் :
இன்னும் ஒரு படி மேலே போய், கேன்சர் ஆபரேஷன் முடிந்த ஒரு பேஷண்ட் இப்படி தான் லிப்ஸ்டிக், ஐ ஷாடோ எல்லாம் போட்டுட்டு இருப்பாங்களா? டிரீட்மென்ட்டுக்கு வந்த மாதிரியே இல்ல ஏதோ பங்ஷனுக்கு வந்த மாதிரி இருக்கு. இதுல போராடி கேன்சரை ஜெயிச்சு இருக்காங்கன்னு டயலாக் வேற. இது உண்மையாகவே கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்துவது போல இருக்கிறது என இணையத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மக்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஸ்கிரீன் அப்பியரன்ஸ் நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு நடிகைக்கு முக்கியம் தான் அதற்காக இப்படி மேக்கப்புடன் ஆபரேஷன் முடிந்தவரை காண்பிப்பது என்பது கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சிந்து மரணம் :
சில தினங்களுக்கு முன் 'அங்காடி தெரு' நடிகை சிந்து கேன்சரால் மிகுந்த துன்பத்தை அனுபவித்து உயிரிழந்தார். ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் அந்த துயரத்தில் இருக்கும் இந்த சூழலில் இது போன்ற காட்சிகள் கேலி சித்திரங்களாக உள்ளன என்றும் கேன்சர் ஆபரேஷனை கிண்டல் செய்யும் விதமாகவும் உள்ளது என கொந்தளிக்கிறார்கள்.இது போன்ற லாஜிக் இல்லாத காட்சிகளால் சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கும் வெகுவாக பாதிக்கக்கூடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.