Neeya Naana: மோசமான சூழலுக்குள் செல்கிறார்களா இளைஞர்கள்? - விவாதத்தை கிளப்பிய நீயா, நானா நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 12 மணிக்கு நீயா? நானா? என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகியுள்ள நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 12 மணிக்கு நீயா? நானா? என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கோபிநாத் நீண்ட நெடுங்காலமாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் விவாதம் நடைபெறும். இது பெரும்பாலான நேரங்களில் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பும். அதில் இந்த வார நிகழ்ச்சி பல கேள்விகளை கிளப்பியுள்ளது.
இந்த வாரம் “வேலைக்கு போகாமல் சாக்கு போக்கு சொல்லும் இளைஞர்கள் vs எப்போ சொந்த காலில் நிக்க போற? என கேட்கும் பெற்றோர்கள்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பேசும் இளைஞர்கள் பெரும்பாலும் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டேங்குகிறார்கள் என்ற பெற்றோர்கள் ஆதங்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. உண்மையில் இன்றைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என பலரும் கமெண்டுகளில் கருத்து தெரிவித்துள்ளனர்.
காலம் மாறிவிட்ட நிலையில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் வந்து விட்டது. ஆனால் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. படித்த படிப்புக்கு வேலை பார்க்காமல் குடும்ப சூழலுக்காக கிடைத்த வேலையை பார்க்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கலாம் என்ற நிலையும் வந்து விட்டது. இப்படி இருக்கையில் குறுகிய காலத்தில் அதிக சம்பளம் வேண்டும் என்ற மனநிலைக்கு இன்றைய சமூகம் இளைஞர்களை மாற்றி வைத்துள்ளது.
குறிப்பாக எந்தவித அனுபவம் இல்லாமல் வேலைக்கு வரும் இளம் வயதினர், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் சம்பளம் இருந்தால் பணி செய்கிறேன் என கறாராக இருக்கிறார்கள். ஆனால் அனுபவம் தான் வேலையில் சம்பளத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்பது ஒருவகை உண்மை. இதை இளம் வயதினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் நிதிநிலையை பொறுத்து தான் புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்கிறார்கள்.
இப்படி இருக்கையில் ஆசைப்பட்ட பணியில் சேர்ந்த பிறகு விருப்பமில்லாமல் விலகுவது, சொந்த பிசினஸ் செய்து அதில் இறக்கம் ஏற்பட்டவுடனேயே கைவிடுவது என்பது இளம் வயதினரிடையே நடந்து தான் வருகிறது. இளம் வயதினருக்கு பொறுமை என்ற ஒன்று குறைந்து விட்டது. அதனால் எதிலும் ஒரு நாட்டமில்லாமல், நினைத்த இடத்தில், நேரத்தில் நடக்க வேண்டும் என அதீத ஆர்வமும் அவர்களை பல நேரங்களில் முன்னேற விடாமலும் தடுப்பதோடு விரக்தியின் மனநிலைக்கு தள்ளி விடுகிறது என்பதை உண்மை.