Neeya Naana: “சினிமாவுக்கு போக மனைவி பெர்மிஷன் வேணுமா?” - புலம்பிய கணவன்.. பொங்கிய கோபிநாத்!
விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 12 மணிக்கு நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
![Neeya Naana: “சினிமாவுக்கு போக மனைவி பெர்மிஷன் வேணுமா?” - புலம்பிய கணவன்.. பொங்கிய கோபிநாத்! vijay tv neeya naana talk show this week may 05th promo viral Neeya Naana: “சினிமாவுக்கு போக மனைவி பெர்மிஷன் வேணுமா?” - புலம்பிய கணவன்.. பொங்கிய கோபிநாத்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/05/7eef7fba558ae8b2a78106d98f6ba7f11714884896091572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் இன்று ஒளிபரப்பாகும் நீயா? நானா? நிகழ்ச்சியின் எபிசோட் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நீயா? நானா? நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 12 மணிக்கு நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பல ஆண்டுகளாக கோபிநாத் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வாதமும் ஒரு தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்துறை சார்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் வழங்குவார்கள். இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தும்.
I am Paavam.. 🤣
— Vijay Television (@vijaytelevision) May 4, 2024
நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV pic.twitter.com/Hb38Wx5sQf
அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சி ”சொன்னாதான் செய்வியா என கேட்கும் மனைவிகள் Vs சொன்னாதான் தெரியும் என சொல்லும் கணவர்கள்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதுதொடர்பான ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
புரிதலே இல்லாத தம்பதியினர்
அதில் பேசும் கணவன் பகுதியில் பேசும் ஒருவர், “நண்பர்களுடன் இணைந்து ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை படத்துக்கு போக பிளான் பண்ணுவோம். நான் இரண்டு நாட்கள் முன்னாடியே மனைவியிடம் சொல்லும்போது சரி என கூறுவார். ஆனால் கிளம்பும் நேரத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொள்வார். நான் போகவா என கேட்கும்போது உன் இஷ்டம் என தெரிவிப்பார்” என கூறுகிறார்.
இதற்கு பதிலளிக்கும் மனைவி, “நான் சரி என பெர்மிஷன் கொடுத்ததும் ரொம்ப ஆடுவார். இங்க இருந்தே அலப்பறை கொடுப்பார். அதனால் அப்படி செய்வேன்” என சொல்கிறார். இதனைக் கேட்டு கடுப்பான கோபிநாத், “ஒரு மனுஷன் சினிமாவுக்கு கூட நிம்மதியா போகக்கூடாதா என புரியவில்லை. நான் இப்படி ஒருத்தனை இதுவரை கேள்வியே பட்டதில்லை” என கணவருக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்.
இதனைப் பார்த்த பலரும் தியேட்டருக்கு செல்லக்கூட அனுமதி வாங்கிட்டு தான் போகணுமா?, இப்படி சரி என சொல்லிவிட்டு பின்னால் முகத்தை தூக்கி வைத்து கொள்வதால் ஆண்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Manjummel Boys: ஓடிடியில் வெளியானது மஞ்சும்மல் பாய்ஸ்.. வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்கள் நெகிழ்ச்சி!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)